வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுக்கும் 5 இயக்குனர்கள்… நெல்சன், அட்லி எல்லோரும் இவங்ககிட்ட கத்துக்கணும்

தற்போது உள்ள இளம் இயக்குனர்கள் எல்லாம் படத்தின் செலவை துல்லியமாக கையாள்வதில் கொஞ்சம் சிரமப்பட்டு வருகின்றார்கள். மேலும் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட செலவு அதிகமாகிறது. சொன்ன தேதியில் படத்தை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஆனால் முன்பு இயக்குனர்கள் எல்லாரும் சொன்ன நேரத்திலும், கொடுக்கப்பட்ட பட்ஜெட்டிலும் படத்தை முடித்துக் கொடுத்து வந்தனர். அப்படி இதுவரை தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்ட 5 இயக்குனர்களை பார்க்கலாம்.

விசு : விசு இயக்கும் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவரே நடித்து இருப்பார். மேலும் கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் படியாக பல படங்களை விசு இயக்கியுள்ளார். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இவருடைய படங்கள் மிகக்குறைந்த பட்ஜெட்டில் தான் எடுக்கப்படும். மேலும் சொன்ன நேரத்தில் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவாராம்.

விக்ரமன் : குடும்ப ஆடியன்சை கவரும் விதமான படங்களை எடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் விக்ரமன். புதுவசந்தம், சூரியவம்சம், வானத்தைப்போல, உன்னை நினைத்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். விக்ரமன் குறைந்த பட்ஜெட்டில் அதிகம் லாபம் தரக்கூடிய படங்களை இயக்கியுள்ளார்.

ராம நாராயணன் : இவருடைய படங்களில் அதிகமாக விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவர் சிகப்பு மல்லி, மேகம் கருத்திருக்கு, துர்கா, மண்ணின் மைந்தன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ராம நாராயணன் 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களுக்கு மேல் இயக்கி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டில் இவருடைய படங்கள் வெளியாகியிருந்தது.

கே எஸ் ரவிக்குமார் : கமர்ஷியல் படங்களின் மூலம் வெற்றி கண்டவர் கே எஸ் ரவிகுமார். நாட்டாமை, படையப்பா, அவ்வை சண்முகி என இவருடைய படங்கள் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாலும் ரசிகர்கள் தவறாமல் பார்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு தன் படங்கள் மூலம் குடும்ப ஆடியன்சை கவர்ந்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் படத்திற்கு ஏற்ற சரியான பட்ஜெட்டை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க கூடியவர்.

ஹரி : ஆக்ஷன் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஹரி. சாமி, கோயில், அருள், ஆறு, தாமிரபரணி, சிங்கம் ஆக்ஷன் நிறைந்த படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். அதிலும் இவருடைய சிங்கம் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. ஹரி குறிப்பிட்ட பட்ஜெட்டில், குறிப்பிட்ட தேதியில் படத்தை எடுத்து முடிக்க கூடியவர்.

Trending News