திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாருமே அறியாத சூரியின் முதல் 5 படங்கள்.. உண்மையான உழைப்பால் உயர்ந்த முருகேசன்

சினிமாவிற்குள் காமெடியனாக வந்த சூரி பல படங்களில் இவருடைய யதார்த்தமான நகைச்சுவை பேச்சால் பல பேர் மனதில் இடம் பிடித்தார். இப்படி தொடர்ந்து காமெடியனாக இவருடைய பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்த்த நிலையில் விடுதலைப் படத்தின் மூலம் இவருடைய கேரக்டர் வேற லெவலுக்கு மாறிவிட்டது. காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய போது இவர் இதுக்கு முன்னாடி காமெடியனாகத்தான் நடித்தாரா இன்று சந்தேகத்தை உண்டாக்கியது.

ஏனென்றால் அந்த அளவுக்கு ஹீரோவுக்கு உண்டான எல்லாம் இவரிடம் கச்சிதமாக பொருந்தி இருந்தது. அதிலும் விடுதலை படத்தில் இவரை தவிர வேறு யார் நடித்தாலும் இந்த கேரக்டருக்கு சூட்டாகாது என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பால் எல்லாரும் மனதையும் வென்று விட்டார். அத்துடன் ரசிகர்களும் இனிமேல் இவர் ஹீரோவாகத்தான் நடிக்கணும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

Also read: விடுதலை படத்திற்கு பிறகு சூரிக்கு இவ்வளவு துணிச்சலா.. அடுத்த பட அப்டேட்டை கொடுத்த குமரேசன்

இப்படி இந்த அளவுக்கு பெயர் வாங்கி வருகிற சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அந்த புரோட்டா சீன் மூலம் தான் மிகவும் பிரபலமானார். அதிலும் அவர் கொடுக்கிற லந்துக்கு அளவே கிடையாது. இந்தப் படத்திற்கு பிறகு தான் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமா படத்தில் காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், குள்ளநரி கூட்டம், வேலாயுதம், மனம் கொத்திப் பறவை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கியமான காமெடியனாக நடித்து வந்தார். அதிலும் சிவகார்த்திகேயனுக்கு இவர் தான் கரெக்டான காமெடியன் என்று சொல்லும் அளவிற்கு இவர்களுடைய காம்போ பெரிய அளவில் ரீச் ஆகி வந்தது. ஆனால் நமக்கு எல்லாம் சூரியன் முதல் படம் வெண்ணிலா கபடி குழு தான் என்று நினைத்திருந்தோம். ஆனால் இதற்கு முன்னதாகவே பல படங்களில் நடித்திருக்கிறார்.

Also read: தொடர்ந்து அந்த கெட்ட பழக்கம் இருந்தால் நான் சொல்றதை கேளுங்க.. வெற்றிமாறன் கூறும் சீக்ரெட்

இதைப் பற்றி தற்போது இவரை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது சினிமாவிற்கு 90களில் வந்தேன் அதில் பல படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்தேன். பின்பு பத்து படங்களுக்குப் பிறகு நடித்த படம் கண்ணன் வருவான் இதில் கவுண்டமணி அவர்களுடன் ஒரு காமெடி சீனில் வந்திருக்கிறேன். அடுத்ததாக காதல் படத்தில் அந்த மென்ஷன் ரூமில் ஒரு பொட்டு வைத்திருக்கும் அதைப் பார்த்து எப்படி லேடிஸ் போட்டு இங்கே இருக்கிறது என்று சொல்லும் கேரக்டரில் நடித்ததாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ஜி படத்தில் வில்லன் கேரக்டருக்கு பக்கத்தில் இரண்டு சீன்களிலும், அடுத்து தீபாவளி படத்தில் ஒரு சீனில் சட்டையை கழட்டி சுற்றிய கேரக்டரிலும் நடித்த பிறகுதான் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்ததில்லை புரோட்டா சீன் இந்த அளவுக்கு எனக்கு பேர் வாங்கி கொடுக்கும் என்று. ஆனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டதால் இப்பொழுது காமெடியனாகவும் ஹீரோவாகவும் இருக்கிறேன். அதற்கு காரணம் மக்கள் அவர்களுக்கு தான் நன்றி சொல்லனும் என்று கூறியிருக்கிறார்.

Also read: சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விடுதலை சூரி.. அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா?

Trending News