வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த 5 சீரியல்கள்.. வந்த வேகத்திலேயே டாப்புக்கு வந்த சன் டிவி சீரியல்

Top 5 serials TRP rating: சின்னத்திரை சீரியல்களை ஒவ்வொரு குடும்பங்களிலும் தினமும் பார்த்து கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சில சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு எக்கச்சக்கமான நாடகங்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். ஆனாலும் அதில் எந்த நாடகம் மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இன் படி ஒவ்வொரு சீரியல்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களைப் பற்றி பார்க்கலாம்.

சுந்தரி: சுந்தரியை பழிவாங்க வேண்டும், வெற்றியுடன் சேரக்கூடாது என்பதற்காக கார்த்திக் கண்ணு தெரியாத போல் நடித்து சுந்தரி வீட்டுக்குள் வந்துவிடுகிறார். வருகிற ரூம் பிரச்சனை காரணமாக சுந்தரி என்னுடனே தங்கிக் கொள்ளட்டும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் வெற்றி அதிர்ச்சியாக நிற்கிறார். இதற்கிடையில் என்ன பூகம்பத்தை கார்த்திக் ஏற்படுத்தப் போகிறார், சுந்தரிக்கும் வெற்றிக்கும் நடுவில் விரிசல் வருமா என்ற பரபரப்புடன் கிளைமாக்ஸை நோக்கி காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.75 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

மருமகள்: தன் மகளுக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எதார்த்தமான குடும்பங்களில் இருக்கும் பெற்றோர்களின் கனவாக இருக்கும். ஆனால் ஆதிரையின் அப்பா அடுக்கடுக்காக செலவுகளை அதிகரிக்கும் விதமாக ஆடம்பரமான செலவுகளை இழுத்து விடுகிறார். இதனால் மகாகஞ்சனாக இருக்கும் பிரபுவுக்கு கடுப்பாகிறது. இருந்தாலும் ஆதிரை, எங்க அப்பா ஆசைப்பட்டதை எல்லாம் செய்யவில்லை என்றால் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவேன் என்று பிளாக்மெயில் செய்து எல்லா செலவுகளையும் பிரபுவை செய்ய வைக்கிறார். இந்த வாரம் 8.97 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: ஹாஸ்டலில் இருந்து வெளிவந்த ஆனந்தி, தங்க இடம் இல்லாமல் அன்பு அடைக்கலம் கொடுத்து வருகிறார். தற்போது தான் அன்பு வேலையை விட்டு நின்று விட்டார் என்ற விஷயமும் மகேஷுக்கு தெரிய வரப்போகிறது. அதனால் எப்படியாவது மீண்டும் அன்புவை வேலையில் சேர்க்க வேண்டும் என்ற விஷயத்தில் மகேஷ் ரொம்பவே மும்மரமாக இருக்கிறார். ஆனால் அன்புவின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த வாரம் 9.17 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு போய்விட்டது.

மூன்று முடிச்சு: சூர்யா, அம்மாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நந்தினி கழுத்தில் தாலி கட்டி விட்டார். ஆனால் நந்தினி என்ன நிலைமையில் இருக்கிறார் என புரிந்து கொள்ளாமல் சூரியா தொடர்ந்து சில சம்பவங்களை செய்வதால் நந்தினி தான் அந்த குடும்பத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார். தற்போது தான் நந்தினி வாய் திறந்து தன்னுடைய நிலைமையை பற்றி சூர்யாவிடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இந்த நாடகம் ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் 9.76 புள்ளிகளை பெற்று டாப்புக்கு வந்துவிட்டது.

கயல்: ஒரு வழியாக தன் ஆசைப்பட்ட காதலியை எழில் கல்யாணம் பண்ணும் விதமாக கயலுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் மூர்த்திக்கு ஏற்பட்ட ஆபத்து தெரியாமல் கயல் கவலைப்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் வேதாளம் பழையபடி முருங்கமரம் ஏறுகிறது என்று சொல்வதற்கு ஏற்ப வேதவல்லி, கயல் குடும்பத்திடம் வந்து சண்டை போடுகிறார். இதையெல்லாம் எப்படி கயல் சமாளிக்கப் போகிறார் என்பதை தொடர்ந்து அடுத்து வரும் காட்சிகள் பரபரப்பாக இருக்கப்போகிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 11.08 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

Trending News