செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த சீரியல்கள்.. விஜய் டிவி சேனலை செல்லா காசாக ஆக்கிய சன் டிவி

Top 5 Serials Trp Rating: விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சிறகடிக்கும் ஆசை சீரியல் மட்டும் டிஆர்பி ரேட்டிங்கில் ஓரளவு புள்ளிகளை பெற்று சன் டிவியுடன் மோதிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் வெளியான கருத்துக் கணிப்பின்படி விஜய் டிவி சேனலை செல்லா காசாக நொறுக்கி சீரியல்களை ஒன்னும் இல்லாமல் ஆக்கியது சன் டிவியில் உள்ள சீரியல்கள் தான். அது என்னென்ன சீரியல்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

சுந்தரி: சுந்தரி வாக்கு கொடுத்தபடி, படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தில் சுந்தரியுடன் வெற்றி கூட்டணி சேர்ந்து இருக்கிறார். ஆனால் இதை எப்படியாவது தடுத்து நிறுத்தி பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்று கார்த்திக் பிளான் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் வெற்றி, பணத்தை எடுத்துட்டு போகும் பொழுது அதை பாதிலேயே தடுத்து பணத்தை ஆட்டைய போடுவதற்கு கூட்டத்துடன் கார்த்திக் காத்துக் கொண்டிருக்கிறார். இப்படி பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் இந்த வாரம் 7.95 புள்ளிகளை பெற்ற ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: மகா கஞ்சத்தனமாக இருக்கும் பிரபுவை பற்றி முழுசாக தெரியாமல் ஆதிரை கண்மூடித்தனமாக நம்பி கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று வேல்விழி, ஆதரையை பார்த்து பிரபுவை பற்றி சொல்லுகிறார். ஆனாலும் ஆதிரை அதைப் பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளாமல் பிரபு பார்த்திருக்கும் வீட்டில் ஒட்டுமொத்த குடும்பத்துடன் கூட்டு குடும்பமாக வாழ போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.40 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: மணமேடையில் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக நந்தினி கழுத்தில் சூர்யா தாலி கட்டி விட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாத நந்தினி அப்பாவிற்காகவும் குடும்பத்திற்காகவும் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் சுந்தரவல்லி ஆட்டம் ஓவராக இருக்கிறது என்பதற்கு ஏற்ப நந்தினி அப்பாவை அவமானப்படுத்தி ஒதுக்குகிறார்கள்.

அதே மாதிரி நந்தினியை டார்ச்சர் செய்ய வேண்டும் என்பதற்கு மொத்த குடும்பமே காத்துக்கொண்டிருக்கிறது. இது எதுவும் தெரியாத சூர்யா குடியோடும் மட்டும் வாழ்ந்து கொண்டு நந்தினிக்கு ஒரு நரகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதை எல்லாம் நந்தினி எப்படி சமாளிக்கப் போகிறார் என்று புரியாத புதிராக இருக்கிறது. இந்த வாரம் 9.03 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: ஆனந்திக்கு ஒரு பாதுகாப்பான இடம் வேண்டுமென்று மகேஷ், ஆனந்தியை கூட்டிட்டு அன்பு வீட்டில் தங்க வைத்து விடுகிறார். ஆனால் அங்கே அன்பு பின் அம்மா வந்ததால் ஆனந்தியை யாருக்கும் தெரியாமல் வெளியே கூட்டிட்டு வந்து அன்பு, மகேஷிடம் ஒப்படைக்க போகிறார். இந்த சூழ்நிலையில் ஆனந்தியும் அன்புவையும் கொலை செய்வதற்கு ஒரு கூட்டம் பிளான் பண்ணி இருக்கிறார்கள். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.04 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: எழில், கயல் கழுத்தில் தாலி கட்டப் போகும் அந்த கடைசி நிமிடத்தில் தீபிகா மண்டபத்திற்குள் வந்து தான் கர்ப்பமாக இருக்கிறேன். இதற்கு காரணம் எழில் தான் என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார். இது பொய் என்பதை கயல் நிரூபித்து விடுவார். ஆனாலும் இப்போதைக்கு இவர்களுடைய கல்யாணம் நடக்குமா? நடக்காதா என்ற சந்தேகம் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 9.90 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக ராமாயணம் சீரியல் 7.50 புள்ளிகளை பெற்ற ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் உள்ள சிறகடிக்கும் ஆசை சீரியல் முதல் ஆறு இடத்தையும் மிஸ் பண்ணி விட்டு டிஆர்பி ரேட்டிங்கில் ரொம்பவே பின் தங்கி போய் இருக்கிறது.

Trending News