ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. கயலை பின்னுக்கு தள்ளி விட்ட இடத்தை பிடித்த சீரியல்

Serial TRP Rating: சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகள் பெற்று டாப் 5 இடத்தை பிடித்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் மோதிக் கொண்டு அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ராமாயணம்: எந்தக் காலமாக இருந்தாலும் புராணக் கதைகளுக்கு எப்பொழுதுமே மவுஸ் உண்டு என்பதற்கு ஏற்ப சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ராமாயணம் சீரியல் மக்களிடத்தில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அதனால்தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமான புள்ளிகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.78 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: கல்யாணம் ஆகவில்லை என்று பிரபு கவலைப்பட்டது தாண்டி தற்போது ஆதரையே கல்யாணம் பண்ணிய பிறகும் தினம்தோறும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு கவலைப்பட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது குடும்பத்திற்குள் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் விதமாக ஆதிரை ஒரு பக்கம் போராடினாலும், இன்னொரு பக்கம் அப்பாவுக்காகவும் சில விஷயங்களை கவனித்து வருவதால் பிரபு கல்யாண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறார். இந்த வாரம் 9.13 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

கயல்: கயல் சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்ததை ஒட்டி தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் கயலுக்கு கல்யாணம் முடிந்த பிறகும் பிரச்சனைகளையும் குடும்பத்திற்காக போராடும் விதமாக தான் கதை நகர்ந்து வருகிறது. இதனால் இந்த நாடகத்தின் மீது இருந்த சுவாரஸ்யம் தற்போது குறைந்துவிட்டது. அந்த வகையில் 9.80 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: நிதானம் இல்லாமல் நந்தினி கழுத்தில் சூர்யா தாலி கட்டி இருந்தாலும் கல்யாணத்திற்கு பிறகும் நிதானம் இல்லாமல் அம்மாவை நோகடிக்க வேண்டும் என்பதற்காக நந்தினி இடம் பழகுவது கொஞ்சம் எரிச்சல் படுத்தும் விதமாக இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் சூர்யா, நிதானத்துடன் இருக்குமாறு காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும். அந்த வகையில் முறைப்படி சூர்யாவுக்கும் நந்தினிக்கும் கல்யாணத்தை பதிவு பண்ணி விட்டால் யாராலும் பிரிக்க முடியாது என்பதற்காக சுந்தரவல்லிக்கு தெரியாமல் குடும்பத்தில் இருப்பவர்கள் பிளான் பண்ணி வருகிறார்கள். இந்த வாரம் 9.92 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: என்னதான் அன்புவின் அம்மா அன்புவை கட்டாயப்படுத்தி துளசியை கட்டி வைக்கலாம் என்று முடிவு பண்ணி இருந்தாலும் அன்புவின் மாமா சொக்கலிங்கம் பிடிக்காத கல்யாணத்தை பண்ணினால் கல்யாண வாழ்க்கை எந்த அளவுக்கு ரணமாக இருக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். அந்த வகையில் இனி துளசி பிரச்சினை வராது என்பதற்கு ஏற்ப அன்பு ரூட்டு கிளியர் ஆகிவிட்டது. ஆனாலும் மகேசுக்கும் கூடிய விரைவில் ஆனந்தி அன்பு காதல் விவகாரம் தெரிய வந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். இந்த வாரம் 10.03 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Trending News