
Serial TRP Rating List: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் எது அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளியான தகவலின் படி எந்த சீரியல்கள் அதிக புள்ளிகள் பெற்று முதல் 5இடத்தை பிடித்திருக்கிறது என்பதை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
சிங்க பெண்ணே: ஒரு வழியாக அன்பு ஆனந்தியின் காதலுக்கு குறுக்கே நின்ற மகேஷ்க்கு தற்போது கொஞ்சம் புத்தி தெளிந்து விட்டது. அதனால் மறுபடியும் அன்புடன் நட்பு ரீதியாக மகேஷ் பழகுவார், நமக்கு எதிரி யார் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவார் என்ற கதைக்கு ஏற்றபடி காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.42 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: சுந்தரவல்லியை என்ன செய்தால் கோபம் வரும் என்று புரிந்து கொண்டு சூர்யா ஒவ்வொரு விஷயத்திலும் டென்ஷன் படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நந்தினி பித்த வாந்தி எடுத்த நிலையில் இது கர்ப்பம் தான் என்று சூர்யா டிராமா செய்து சுந்தரவல்லி வெறுப்பேற்றுகிறார். இன்னொரு பக்கம் நந்தினி கர்ப்பமாக இருக்கிறார் என்று அர்ச்சனா தவறாக புரிந்து கொண்டு பழி வாங்குவதற்கு இன்னும் முயற்சி எடுத்து வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.10 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
கயல்: தேவிக்கு குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய பிறந்த குழந்தையை கூட விக்னேஷ் பார்க்க வரவில்லை என்ற கோபத்தில் பொங்கி எழுந்த தேவி நேரடியாக மாமியார் வீட்டிற்கு சென்று மாமியாரையும் விக்னேஷியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். அத்துடன் விக்னேஷுக்கு கொடுக்க வேண்டிய விவாகரத்து கொடுத்து மூஞ்சில் தூக்கி எறிந்து விட்டார். இன்னொரு பக்கம் எழில் பெரிய பொறுப்பில் வேலை பார்க்கிறோம் என்று கயலை ஏமாற்றி வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.00 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மருமகள்: பிரபுவின் ஆபிசுக்கு சென்று ஆதிரை சித்தி, பிரபுவை அவமானப்படுத்துகிறார் என்று தெரிந்த ஆதிரை நேரடியாக பிரபு ஆபீஸ்க்கு சென்று சித்தியை தடுத்துப் பார்க்கிறார். ஆனால் வாய்க்கு வந்தபடி ஆதிரையின் சித்தி பேசியதால் கோபப்பட்ட ஆதிரை சித்தி என்று கூட பார்க்காமல் கன்னத்தில் அறைந்து வெளியே போடி என்று அனுப்பிவிட்டார். இதனால் ஆக்ரோஷத்தில் இருக்கும் சித்தி, ஆதிரை மற்றும் பிரபு வாழ்க்கையை கெடுக்கும் அளவிற்கு பழி வாங்கும் எண்ணத்துடன் அழைக்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.05 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
சின்ன மருமகள்: எப்போதுமே விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று வருவது சிறகடிக்கும் ஆசை சீரியல்தான். ஆனால் இந்த வாரம் முதல் முறையாக சிறகடிக்கும் ஆசை சீரியலை பின்னுக்குத் தள்ளி விஜய் டிவியில் உள்ள மற்றொரு சீரியல் முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் சின்ன மருமகள் சீரியல் 7.81 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இன்னும் போகப்போக சிறகடிக்கும் ஆசை சீரியல் ரோகினியால் தடம் புரண்டு போகப் போகிறது.