திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

Serial Top Five Ratings: படங்களை விட சீரியலுக்கு தான் மவுஸ் அதிகம் என்பதை காட்டும் விதமாக ரசிகர்கள் சீரியலை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். அதிலும் போட்டி போடும் விதமாக எந்த சேனலின் நாடகங்கள் முதலில் ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வருகிறீர்கள் என்பதை டிஆர்பி ரேட்டிங்கை வைத்து அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 வரை இடம் பிடித்திருக்கும் சீரியல்களை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இந்த வாரம் முதல் இடத்தில் பிடித்திருக்கும் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல்தான். என்னதான் குணசேகரனின் கேரக்டர் பிற்போக்குத்தனமாக இருந்தாலும் அவரை சாட்டை அடிக்கும் விதமாக வாடிவாசல் பெண்கள் இருப்பதால் இந்த நாடகம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது.

Also read: என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது.. அவசரமாக மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் தனம்

இதனைத் தொடர்ந்து 2-ஆம் இடத்தில் பெண்ணாகப் பிறந்து விட்டோம் என்பதை பெருமையுடன் நினைத்து அந்த குடும்பத்தை கட்டி காக்கும் பொறுப்புடன் பிரச்சினைகளை சமாளிக்கும் விதமாக வரக்கூடிய சீரியல் கயல். இதில் தன் சொந்த விருப்பத்திற்கு இடம் கொடுக்காமல் 24 மணி நேரமும் குடும்பத்தை பற்றி மட்டுமே யோசிப்பதால் குடும்பங்களின் பல பேருக்கு இந்த நாடகம் பிடித்திருக்கிறது.

அடுத்ததாக 3-வது இடத்தில் கணவர் கைவிட்டாலும் புகுந்த வீட்டு குடும்பத்தை பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல். இதனைத் தொடர்ந்து, எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் என் லட்சியத்தை நான் செய்து முடிப்பேன் என்று பல வருட காலமாக கலெக்டர் ஆவதற்கு போராடிவரும் சுந்தரி சீரியல் 4- ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.

Also read: குணசேகரனிடம் சிக்கி சீரழியும் சிறுசு முதல் பெருசு.. நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மருமகள்

அடுத்ததாக அண்ணன் தங்கை பாச போராட்டத்தை எதார்த்தமாக கொண்டு வந்திருக்கும் வானத்தைப்போல சீரியல். அதிலும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் நம்ப வைத்தது மட்டும் இல்லாமல் பார்ப்பவர்களையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாடகம் 5-வது இடத்தை பெற்றிருக்கிறது.

இப்படி தொடர்ந்து நான்கு இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி, விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி விட்டது. போற போக்க பாத்தா விஜய் டிவியை உள்ளே வரவிடாமல் அனைத்தையும் ஆக்கிரமித்து தலை தூக்கி நிற்கப் போகிறது சன் டிவி சீரியல்கள்.

Also read: பால் பாயாசத்துக்கு வாயை பிளக்கும் கோபி.. பாலாஜியின் ரியாக்ஷன் ஒன்னு வச்சு வாழவே வக்கு இல்ல எப்புட்றா.!

Trending News