Netflix Top 5 Tamil Movies: தியேட்டரில் வெளியாகும் படங்கள் ஒரு மாதத்திற்கு பிறகு ஒடிடியில் வெளியாகிறது. இவ்வாறு நெட்ஃபிளிக்ஸ் ஒடிடிய தளத்தில் வெளியாகி டாப் 5 இடங்கள் பெற்ற படங்களை இப்போது பார்க்கலாம்.
தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான படம் தான் வாத்தி. தனுஷ் ஹீரோவாக நடித்த இந்த படம் தியேட்டரில் பெரிய அளவில் போகவில்லை. ஆனால் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக தனுஷின் மற்றொரு படமும் நான்காவது இடத்தில் இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படம் வரவேற்பை பெற்றது. இந்த படமும் நெட்ஃபிளிக்ஸில் டாப் 5 இடங்களில் இருக்கிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் முதலில் உள்ள ஐந்து படங்கள்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் பீஸ்ட். தியேட்டரில் வெளியான போது இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் தான் வந்தது. ஆனால் ஓடிடியில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படம் தியேட்டரில் அமோக வரவேற்பை பெற்றது. விக்ரம் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்த நிலையில் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா காமினேஷனில் வெளியான படம் தான் விடாமுயற்சி. இப்படம் எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஆனாலும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் முதலிடத்தில் இருக்கிறது.