புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 5 சுற்றுலா தலங்கள்.. முதல் இடத்தில் அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட்

Top 5 Tourism Place In Google Search : பொதுவாக விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதுவும் மிகவும் சாகசம் நிறைந்த இடத்திற்கு செல்ல பலர் விருப்பப்படுகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடம் 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐந்து சுற்றுலா தலங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதில் முதல் இடத்தில் அஜர்பைஜான் இடம்பெற்று இருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு இங்கு தான் நடைபெற்றது.

அங்கிருந்த நிறைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக பலரும் இந்த சுற்றுலா தலத்திற்கு செல்ல ஆசைப்பட்டு உள்ளனர். வித்யாசமான கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளை கொண்ட இடமாக அஜர்பைஜான் உள்ளது.

2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 5 சுற்றுலா தலங்கள்

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் பாலி உள்ளது. இயற்கை நிறைந்த சூழல் மற்றும் கடற்கரை விரும்புவோர்களுக்கு பாலி ஒரு அற்புதமான இடமாக அமைந்திருக்கிறது. அதிலும் புதிதாக திருமணம் செய்த தம்பதியினர் ஹனிமூனுக்காக இந்த இடத்தை அதிகம் தேடிச் செல்கின்றனர்.

மூன்றாவது இடத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி இடம்பெற்று இருக்கிறது. குளிர் பிரதேசமான மணாலியில் பனிச்சறுக்கு, உறைந்த அருவிகள் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று இருக்கிறது.

கஜகஸ்தான் நான்காவது இடத்தில் இருக்கிறது. மிகவும் சிறப்பு மிக்க இடமான இதில் நவீன மயமாக்கப்பட்ட நகரங்கள் மற்றும் வானுயர்ந்த மலைகள் என பல பிரமிக்க வைக்கும் இடங்கள் இடம்பெற்று இருக்கிறது.

மேலும் ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் இடம் பெற்றிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பலர் இந்த சுற்றுலா தலத்தை பெரிதும் விரும்புகின்றனர். ஆகையால் இந்த வருடத்தில் ஐந்தாவது இடத்தில் கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலத்தில் ஜெய்ப்பூர் இடம் பெற்றுள்ளது.

Trending News