விஜய்யிடம் இருக்கும் அந்த 5 சொகுசு கார்கள்.. தளபதியை சொக்கவைத்த வாகன கம்பெனி

90 காலகட்டங்களில் நடிக்க வந்த புதிதில் விஜய்யிடம் டாட்டா கம்பெனி தயாரிப்பான டாட்டா எஸ்டேட் கார் மட்டுமே இருந்தது. அப்போதே விஜய் அந்த காரை 3 லட்சத்துக்கு வாங்கியுள்ளாராம். அப்போது முன்னணி நிறுவனமாக இருந்தது டாட்டா கம்பெனி தான்.

கொஞ்சம் பாப்புலரான பிறகு டாட்டா கம்பெனியின் பிரீமியம் காரை 5 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். அதில் தான் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார் தளபதி விஜய். அதன்பின் வாய்ப்புகள் விஜய்க்கு குவிந்த பின்னர் டாட்டா கம்பெனியின் சியரா காரை வாங்கி அசத்தினார் அப்போதைய விஜய்.

அதன் பின்னர் சினிமாவில் படிப்படியாக ஆலமரம் போல் வளர ஆரம்பித்தார். இப்பொழுது அவரிடம் ஐந்து சொகுசு கார்கள் இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தார் போல் பயன்படுத்தி வருகிறார். சில சமயம் எளிமையாக சைக்கிளிலும் வந்து ஆச்சரியம் அளிக்கிறார். விஜய்யிடம் உள்ள சொகுசு கார்கள்.

மினி கூப்பர்: 45 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் கார் விஜய்யிடம் இருக்கிறது. இந்த காரை அவர் நீலாங்கரை பகுதியில் சுற்றிவர பயன்படுத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த காரில் செல்லும் போது விஜய் தனியாகத்தான் செல்கிறாராம். இது விஜய்க்கு மிகவும் பிடித்தமான கார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 6: இந்த கார் 70 இலட்சத்திலிருந்து 82 லட்சம் வரை ஷோரூமில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரை விஜய் தனது மனைவி சங்கீதாவிற்காக வாங்கியுள்ளார் பெரும்பாலும் விஜய் இதை பயன்படுத்துவதில்லை.

ஆடி A8: ஒன்றை கோடி மதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் வைத்துள்ளார் விஜய். இது பெரும்பாலும் எல்லா நடிகர்களும் வைத்திருக்கிறார்கள். விராட் கோலி, மகேந்திர சிங் தோனி போன்ற கிரிக்கெட் வீரர்களிடமும் இந்த கார் இருக்கிறது.

தளபதியை சொக்கவைத்த வாகன கம்பெனி

டொயோட்டா இன்னோவா: இந்த கார் கம்பெனி விஜய்யை மிகவும் கவர்ந்த கம்பெனியாம். இந்த காரைத்தான் அவர் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார். பார்மலாக எந்த விழாவிற்கு சென்றாலும் இந்த காரை தான் பயன்படுத்துகிறார்கள் விஜய். இந்த காரின் விலை 40 லட்சம்

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்: சுமார் ஒன்பது கோடி மதிப்பில் விஜய் வைத்திருக்கும் கார் ரோல்ஸ் ராய்ஸ். இது கோஸ்ட் வேரியண்ட் என்று சொல்லப்படும் டாப் கிளாஸ் மாடல். இந்த காரை இப்பொழுது விஜய் விற்கும் முடிவில் இருக்கிறார். இது போக அவரிடம் 60 லட்சம் மதிப்பிலான பென்ஸ் கார் ஒன்றும் இருக்கிறது.