சமீபகாலமாக தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களே 100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் பாதி நடிகர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது. ஆனாலும் உச்ச நடிகர்களின் படத்தை தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன்வர காரணம் ரசிகர்கள் எப்படியும் அந்த படத்தை வெற்றி பெறச் செய்துவிடுவார்கள். அவ்வாறு நூறு கொடியை தாண்டி வசூல் செய்த டாப் 6 நடிகர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 9 படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி உள்ளது. அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.o, கபாலி, எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த, காலா, சிவாஜி, லிங்கா ஆகிய படங்கள் அதிக வசூல் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Also Read :ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்.. காசுக்காக மட்டும்தான் நடிப்பேன் என மறுத்த இளம் நடிகை
விஜய் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு அடுத்தபடியாக தளபதி விஜய் அதிக வசூல் பெற்ற 8 படங்களை தந்துள்ளார். பிகில், மெர்சல், சர்கார், மாஸ்டர், தெறி, துப்பாக்கி, கத்தி, பீஸ்ட் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
அஜித் : இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இவருடைய ஏழு படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி உள்ளது. விஸ்வாசம், வலிமை, விவேகம், வேதாளம், நேர்கொண்ட பார்வை, ஆரம்பம், என்னை அறிந்தால் படங்கள் இதில் அடங்கும்.
Also Read :உதயநிதியால் பெரும் சிக்கலை சந்தித்த அஜித், விஜய்.. வேறு வழியில்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள்
சூர்யா : நடிகர் சூர்யாவுக்கு சிங்கம் படத்திற்கு பிறகு தான் ஒரு மாஸ் ஆடியன்ஸ் கிடைத்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து அவரது நான்கு படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. சிங்கம் 2, சிங்கம் 3, 24, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தது.
கமல்ஹாசன் : உலகநாயகன் கமலஹாசன் பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் மூன்று படங்கள் தான் மெகா ஹிட் படங்களாக கொடுத்துள்ளார். அதாவது விஸ்வரூபம், தசாவதாரம், விக்ரம் ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தது. அதிலும் விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.
Also Read :எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்ஹாசன்.. கடைசியில் வருந்திய சம்பவம்
தனுஷ் : தனுஷ் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷின் அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. தற்போது நானே வருவேன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் தனுஷ் நடித்துள்ளார்.