ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

80-களில் இருந்து இன்று வரை சினிமாவை ஆட்டிப் படைத்த 6 நடிகைகள்.. நயன்தாராவுக்கு முன்னாடி இவங்க தான் டாப்பு

80 களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி உள்ளனர். அதில் சினிமாவையே ஆட்டிப் படைத்தவர்கள் என்றால் சிலர் தான். இந்த நடிகைகள் வந்த புதிதில் இவர்களுக்கு இணையாக நடித்த நடிகைகள் அஞ்சி நடுங்கினார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த 6 நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

ஸ்ரீதேவி : கமலஹாசனுடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஸ்ரீதேவியின் நடிப்பு அபாரம். தற்போது ஸ்ரீதேவி இந்த மண்ணுலகில் இல்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மீனா : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் மீனா. இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் மீனா கடைசியாக மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக புரே ஜேடி என்ற படத்தில் மீனா நடித்திருந்தார்.

சிம்ரன் : ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சிம்ரன். இதை தொடர்ந்து விஜய், அஜித், மாதவன், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது நயன்தாரா போல் அந்தக் காலகட்டத்திலேயே நடிகர்களுக்கு டஃப் கொடுத்தார் சிம்ரன். கடைசியாக மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜோதிகா : பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் ஜோதிகா. இவரது கண்களே நடிக்கும். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார்போல் கனகச்சிதமாக நடிக்கக் கூடியவர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பின்பு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திரிஷா : தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருபவர் திரிஷா. இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதிலும் 96 படத்தில் இவரது ஜானு கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்துள்ளார்.

நயன்தாரா : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் முதல்முறையாக பாலிவுட்டில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Trending News