சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

2023-இல் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் 6 ஹீரோக்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

Actor Vijay: சமூக வலைத்தளங்களில் எந்த நடிகருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை பொருத்து தான் அவர்களுடைய செல்வாக்கு அமைகிறது. இந்த சமூக வலைத்தளத்தை தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு சப்போர்ட் பண்ணும் முக்கிய இடமாக ரசிகர்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் ஆறு ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் 6 ஹீரோக்கள்

சிம்பு: இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் நடிகர்களில் சிம்பு தான் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு 12.4 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் சிம்புவுக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இந்த அளவுக்கு ரசிகர்களை அவர் சேர்த்து வைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு தான் சிம்பு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கி இருக்கிறார்.

விஜய்: தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிறார் நடிகர் விஜய். இவர் இந்த வருடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தான் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கினார். கருப்பு நிற கோட் அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முதல் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். எட்டு மாதத்தில் விஜய்க்கு 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் கிடைத்திருக்கிறார்கள்.

Also Read:தளபதி 68 டைட்டில் Boss இல்ல Puzzle-லும் இல்ல.. மொத்த சீக்ரெட்டையும் போட்டு உடைத்த அர்ச்சனா கல்பாத்தி

சூர்யா: நடிகர் சூர்யா தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்து கங்குவா என்ற பிரம்மாண்ட திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. சூர்யா 8.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தன்னுடைய காதல் மனைவி ஜோதிகா நடித்த காதல் தி கோர் படத்தை பாராட்டி சமீபத்தில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்து மேரி கிறிஸ்மஸ் என்னும் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அந்த படத்தின் போஸ்டரை தான் விஜய் சேதுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் செய்து வைத்திருக்கிறார். இவருக்கு மொத்தம் 7.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

தனுஷ்: நடிகர் தனுஷ் பெரும்பாலும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களை படத்தின் பிரமோஷனுக்காகத்தான் பயன்படுத்துகிறார். அவருடைய சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எப்போதாவது தான் பகிர்வார். கடந்த வருடம் தன்னுடைய விவாகரத்து செய்தியையும் சமூக வலைத்தளத்தில் தான் பகிர்ந்திருந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 6.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பெரும்பாலும் ரசிகர்களுடன் நிறைய மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் தீபாவளி அன்று குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், கொட்டுக்காளி படம் பெர்லின் சர்வதேச விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது, காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கான தன்னுடைய லுக் என தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 6.7 மில்லியன் பாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

Also Read:கங்குவாவை அடுத்து கேங்ஸ்டர் ஆக களம் காண உள்ள சூர்யா. பலநூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்

Trending News