ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. சற்றும் எதிர்பாராத மாற்றம் 

Top 6 Serial TRP Ratings: வீட்டில்  இருக்கும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் தற்போது இளைஞர்களும் சீரியல்களை பார்க்கத் துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு  திரைப்படங்களுக்கு நிகரான சீரியல்களை பிரபல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கின்றனர். அதில் எந்த சீரியல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி  ரேட்டிங்கை வைத்துதெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் கடந்த வாரம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. இதில் 10-வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் கார்த்திகை தீபம் பிடித்திருக்கிறது. 9-வது இடம் அழகைப் பார்த்து காதல் வருவதில்லை என்பதை உணர்த்திய  சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் பிடித்துள்ளது. 

Also Read: விஜய் டிவியிலிருந்து வெளியேற இதுதான் முக்கிய காரணம்.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என தெரிந்து ஓடிய DD

இதன் தொடர்ச்சியாக சற்றும் எதிர்பாராத வகையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .இந்த சீரியல் முன்பெல்லாம் டாப் 5 இடத்தில் இருக்கும், ஆனால் இப்போது அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் வெறுத்துப் போய் இந்த சீரியலை பார்ப்பதை குறைத்து விட்டனர். அதனால் தான் இப்போது டிஆர்பி-யில் பயங்கர அடி வாங்கி இருக்கிறது. 

ஆனால் அதே சேனலில் சில மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் 7-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் சீக்கிரம் டாப் 5 இடத்திற்கு முன்னேறி விடும். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறது. 6-வது இடம் சன் டிவியின் Mr. மனைவி சீரியலுக்கும், 5-வது  இடம் இனியா சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

அதேபோல் 4-வது இடம் பெண்களை அடிமைப்படுத்த நினைத்த ஆண்களுக்கு சரியான பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியலுக்கு கிடைத்துள்ளது. 3-வது இடம் அண்ணன் தங்கை பாசத்தையும், கணவன் மனைவியின் உன்னதமான உறவையும் வெளிப்படுத்தும் வானத்தைப்போல  சீரியல் பெற்றுள்ளது.

Also Read: 8000 பேர் உயிரைக் காப்பாற்றும் விஜய் டிவி பிரபலம்.. இதுவும் ஒருவிதமான போதை தான்

இதன் தொடர்ச்சியாக நான்கு மருமகள்கள் தங்களது சுயமரியாதையை நிலை நிறுத்துவதற்காக போராடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதில்ஆதி குணசேகரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் வில்லத்தனமான பேச்சு கேட்பதற்காகவே இந்த சீரியலை அனுதினமும் சின்னத்திரை ரசிகர்கள் தவறாமல் பார்க்கின்றனர்.

மேலும் கடந்த பல மாதங்களாகவே சன் டிவியின் கயல் சீரியல்தான் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கயல் சீரியலுக்கு தான் முதலிடம் கிடைத்துள்ளது. இந்த சீரியல் சுவாரசியம் குறையாமல் ரசிகர்கள் விரும்பும் வகையில் நாளுக்கு நாள் அதிரடி திருப்புங்கள் நிறைந்திருப்பதால் ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாகவே மாறிவிட்டது.

Also Read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

Trending News