சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

TRP Rating: டிஆர்பி யில் கொடி கட்டி பறக்கும் டாப் 6 சீரியல்கள்.. சன் டிவியுடன் போட்டி போடும் விஜய் டிவி ஆட்டநாயகன்

TRP Rating: சின்னத்திரை பொருத்தவரை சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் இல்லதரசிகளுக்கு சீரியல் மட்டும்தான் பொழுதுபோக்கு என்று பார்த்து வருகிறார்கள். அதற்கேற்ப சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பல சேனல்கள் புதுப்புது நாடகங்களை வித்தியாசமாக கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் கொடிகட்டி பறக்கும் டாப் 6 சீரியல்களின் ரேட்டிங்கை பார்த்து வருகிறோம். இந்த வாரம் டிஆர்பி யில் கொடி கட்டி பறக்கும் சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

முதல் பாகம் முடிந்த நிலையில் இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் 6.62 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. கார்த்திக்கு தமிழ் தான் தன்னுடைய குழந்தை என்று தெரிந்ததும் சுந்தரி வீட்டில் வந்து இருக்கிறார். அத்துடன் கார்த்திக் தனது அப்பா என்று தெரியாமலேயே தமிழ் மொத்த பாசத்தையும் கார்த்திக் மீது காட்டி வருகிறார். இதையெல்லாம் பார்த்த சுந்தரி எப்படி கார்த்திக்கிடம் இருந்து தமிழை பிரிப்பது என்று முழித்துக் கொண்டு வருகிறார்.

இதனை அடுத்து இந்த ஒத்த சீரியல் மூலம் கடந்த பல வாரங்களாக டாப் இடத்தில் விஜய் டிவி இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் 7.15 புள்ளிகளை பெற்று தொடர்ந்து ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரோகிணி எப்பொழுது கையும் களவுமாக மாட்டுவார் என்ற ஏக்கத்துடன் மக்கள் பார்த்து வருவதால் அதிக வரவேற்பு இந்த நாடகத்திற்கு கிடைத்து வருகிறது.

அடுத்ததாக கதையே இல்லாமல் பல வருடங்களாக ஓட்டி வரும் அண்ணன் தங்கை பாசமான வானத்தைப்போல சீரியல் 7.48 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. தினுசு திணுசாக சிக்கல்களை ஏற்படுத்தி துளசியும் சின்ராசையும் பிரிக்கும் பொன்னியின் பரமபத ஆட்டத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் சிக்கி தவித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து 7.54 புள்ளிகளை பெற்று இந்த வாரமும் மூன்றாவது இடத்தை பிடித்தது எதிர்நீச்சல் சீரியல். எப்பொழுது தான் குணசேகரன் வீட்டு மருமகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்ற குழப்பத்திலேயே இந்த கதை ஓடிக் கொண்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் இல்லாமல் புதுப்புது கேரக்டர்களை கொண்டு வந்து பல குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்ததாக கயல் சீரியலில் எழிலுடன் கல்யாணம் நடக்கும் காட்சிகள் எப்பொழுது என்று எதிர்பார்க்கும் நேரத்தில் தம்பிக்கு வந்த புது பிரச்சினையால் கயல் வித்தியாசமான திடீர் முடிவை எடுத்திருக்கிறார். அதாவது கயலின் தம்பி காதலித்து ஏமாற்றியதாக ஒரு பெண் வழக்கு தொடுத்து இருக்கிறார்.

அதன்படி கயல் தம்பியை விசாரணைக்கு வந்த போலீசார் முன்னாடி கயல் ஒரு தாலி கயிறு கொடுத்து அந்தப் பெண் கழுத்தில் தாலி கட்டு என்று தம்பியிடம் சொல்கிறார். வழக்கம்போல் இதை பார்த்தும் அந்த பெண் தலை தெரித்து ஓடப் போகிறார். அந்த வகையில் 8.38 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை தொடர்ந்து பல மாதங்களாக தக்க வைத்திருக்கிறது.

இதனை தொடர்ந்து வழக்கம் போல் கடந்த பல மாதங்களாக முதலிடத்தில் ஒய்யாரமாக இருப்பது சிங்க பெண்ணே சீரியல். அந்த வகையில் 8.81 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அழகன் யார் என்று தெரியாமல் நந்தா தான் அழகன் என்று ஆனந்தி நம்பும் படியான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். இதை எப்படி அன்பு சரி செய்யப் போகிறார் என்ற பல குழப்பத்துடன் இந்த கதை நகர்ந்து வருகிறது. இது எதுவும் தெரியாமல் மகேஷ் ஆனந்தியை தன் பொண்டாட்டி போல நினைத்து காதலித்து வருகிறார். கடந்த பல மாதங்களாக ஆனந்தி யாரை தான் கல்யாணம் பண்ணப் போகிறார் என்ற கேள்வி கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Trending News