செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

This Week Serial TRP Ratings: சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை அனுதினமும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி-யில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இருக்கும் டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 9-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 8-வது இடத்தில் சிறகடிக்க ஆசை என்ற சீரியலும், 7-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும் இடம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 6-வது இடத்தை இனியா சீரியல் பிடித்துள்ளது. இவ்வளவு நாளாக இனியாவை பாசமாக பார்த்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு தலையில் அடிபட்டு மறுபடியும் ரகடுபாய் ஆக மாறி அவரை கொடுமைப்படுத்துகிறார். அவரை சமாளிப்பதற்கு இனியா ஒவ்வொரு நாளும் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடம் சுந்தரிக்கு கிடைத்துள்ளது. கலெக்டராக வேண்டும் என்ற வெறியுடன் இருந்த சுந்தரி இப்போது மாவட்ட ஆட்சியராக தன்னுடைய மிடுக்கான தோரணையுடன் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேரில் இந்த வாரம் வெளியேறும் சூனியக் கிழவி.. வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

மேலும் 4-வது இடம் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியல் முன்பெல்லாம் முதலிடத்தில் இருக்கும். ஆனால் இதில் ஆதி குணசேகரன் ஆக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டிய மாரிமுத்துவின் மறைவுக்கு பின், அவருக்கு பதில் நடிக்கும் வேலராம மூர்த்தியால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் இந்த சீரியலை பார்க்கவே இப்போது எரிச்சலாக இருக்கிறது.

3-வது இடம் புத்தம் புது சீரியலான சிங்கப் பெண்ணே சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெகு சீக்கிரமே ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் ஆனந்தி சில்வண்டு போல் இருந்து கொண்டு சிங்கமாய் அவ்வபோது கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். இவருக்காகவே நிறைய பேர் இந்த சீரியலை பார்க்கத் துவங்கி விட்டனர்.

2-வது இடம் கயல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் சீரியல்தான் எதிர்நீச்சலுடன் போட்டி போட்டுக் கொண்டு முதல் இடத்தை தக்க வைக்கும். ஆனால் இப்போது இந்த சீரியலில் விறுவிறுப்பும் சுவாரசியமும் குறைந்து விட்டதால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கயல் தனி ஒரு ஆளாக குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு போராடுவது பலருக்கும் உந்துதலாக இருக்கிறது.

Also Read: பிரதீப்பை ஆட்டம் காண வைக்கும் 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. சூடு பிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

முதலிடம் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை அழகாக காண்பிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தங்கையை அவருடைய கணவருடன் எப்படியாவது சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என அண்ணன் படும் பாடு பார்ப்போரை கலங்க வைக்கிறது.

Trending News