வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. கதிரின் மாற்றத்தால் முன்னுக்கு வந்த எதிர்நீச்சல்

Top 6 serials in this week’s TRP rating: என்னதான் முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய பெரிய படங்கள் பிரம்மாண்டமாக திரையரங்குகளுக்கு வந்தாலும் தினமும் குடும்பத்துடன் மக்கள் விரும்பி பார்ப்பது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான். அதனாலேயே இதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கை பிடித்து விட வேண்டும் என்று ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை பிடித்திருக்கும் சீரியல்களைப் பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் எத்தனை நாடகங்கள் புதுசு புதுசாக கொண்டு வந்தாலும் முதல் ஐந்து இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் தற்போது ஒளிபரப்பாகின்ற நாடகத்தில் மக்களின் பேவரிட் நாடகமாக இருப்பது சிறகடிக்கும் ஆசை சீரியல். இந்த ஒரு சீரியல் 8.55 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. அம்மாவின் பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் முத்துவின் எதார்த்தமான நடிப்பும், இல்லாத வீட்டு மருமகளாக நுழைந்த மீனா படும் கஷ்டத்தையும் அழகாக கொண்டு வருகிறார்கள்.

அடுத்ததாக சன் டிவியில் 5-வது இடத்தை பிடித்து 8.56 புள்ளிகளை பெற்றது சுந்தரி சீரியல். கலெக்டர் ஆன பிறகும் தொடர்ந்து சுந்தரிக்கு பிரச்சினை வருவதை எதிர்த்து சமாளிக்கும் விதமாக இரண்டாம் பாகமாக கதை நகர்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அண்ணன் தங்கை பாசத்திற்கு முன் மற்றவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கண்மூடித்தனமாக அன்பை காட்டி வரும் துளசி மற்றும் சின்ராசுவின் பாசப் போராட்டங்களை கொண்டு வரும் வானத்தைப்போல சீரியல் 4-வது இடத்தைப் பிடித்து 9.79 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

Also read: ஜீவானந்தத்திற்கு க்ளு கொடுத்த தர்ஷினி.. குணசேகரனை செல்லா காசாக ஆக்கப்போகும் மல்லுவேட்டி மைனர்

இதனை அடுத்து ஆரம்பத்தில் விரும்பி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் தற்போது புதுசு புதுசாக ஒரு பிரச்சனையை கொண்டு வந்து குழப்பத்தையே காட்டி வருகிறார்கள். அதனாலயே சற்று பின்னோக்கிப் போனது. ஆனால் தற்போது கதிர் முற்றிலுமாக மாறி வருவதால் மறுபடியும் நாடகம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் கொஞ்சம் முன்னேறி 3-வது இடத்திற்கு வந்து 9.98 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

அடுத்ததாக ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வரலாம். ஆனால் வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கிறது என்றால் அது லாஜிக்கே இல்லை என்ற சொல்வதற்கு ஏற்ப கயல் சீரியலில் கதை நகர்ந்து வருகிறது. நடுத்தர குடும்பத்தில் பணம் வசதி இல்லாதவர்கள் கூட இந்த மாதிரி பிரச்சினைகளை சமாளிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு எதார்த்தத்தையும் மிஞ்சி கயல் நாடகத்தின் கதை இழுத்தடிக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து 2-வது இடத்தை பிடித்து 10.34 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து காட்டுவோம் என்பதற்கு ஏற்ப சிங்கப்பெண்ணாக புதுசாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் வந்த கொஞ்ச நாட்களிலேயே முதல் இடத்தை பிடித்து விட்டது. ஆனால் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி ஆனந்தி சிங்கர் பெண்ணா இல்லாமல் மகேஷ் மற்றும் அன்புவின் உதவியால் வாய் சவடால் விட்டு வருகிறார். தற்போது இந்த நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் 11.01 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

Also read: பேராசையால் கனவு கோட்டை கட்டி வரும் விஜயா.. ரோகிணி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட முத்து

Trending News