Top 6 serials in this week’s TRP rating: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கிறது என்பது ஒவ்வொரு வாரமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் இல் டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
இனியா: கடந்த கொஞ்சம் வாரங்களாக இனியா சீரியல் 7.22 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. எப்படியாவது காதலித்த விக்ரமுடன் சேர வேண்டும் என்று மாயா விக்ரமின் அப்பாவை கைக்குள் போட்டு இனியாவை டார்ச்சர் பண்ணி வருகிறார். இதை விக்ரம் கண்டுபிடித்து மாயாவிடம் இருந்து இனியாவை காப்பாற்ற போராடி வருகிறார்.
வானத்தைப்போல: அண்ணன் தங்கையின் ஓவர் பாசத்தால் பொன்னி, துளசியை படாதபாடு படுத்தி வருகிறார். எப்படியாவது துளசி வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்று பொன்னி, சின்ராஸ்க்கு தெரியாமல் சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இந்த நாடகம் 7.55 புள்ளிகளை பெற்று வழக்கம்போல் 5-வது இடத்தில் இருக்கிறது.
கதை தடுமாறிப் போனாலும் கெத்தாக நிற்கும் எதிர்நீச்சல்
சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் இந்த ஒரு சீரியல் தான் 7.79 புள்ளிகளை பெற்று 4வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் மனோஜ் மூலமாக குடும்பத்தில் ரணகளத்தை ஏற்படுத்தி அதன் மூலம் எஸ்கேப்பாக வேண்டும் என்று ஒவ்வொரு சூழ்ச்சியாக செய்து வருகிறார் ரோகினி. ஆனால் முத்து மீனா இருக்கும் வரை எந்த தவறும் நடக்காத படி கதை எதார்த்தமாக நகர்ந்து வருகிறது.
எதிர்நீச்சல்: தற்போது வருகிற கதைப்படி எதிர்நீச்சல் சீரியலின் ட்ராக் தடுமாறி போனாலும் தொடர்ந்து 8.27 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தை பிடித்து கெத்து காட்டி வருகிறது. அதிலும் இப்பொழுது முதல்முறையாக ஜனனி டீம் குணசேகரனை தோற்கடித்து ஜெயிக்கப் போகிறார்கள். அந்த வகையில் கதை கொஞ்சம் சுவாரசியமாக அமைந்து வருகிறது.
கயல்: தொடர்ந்து இந்த சீரியல் 2-வது இடத்தை பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் 8 .91 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கயல் குடும்பத்தார் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருப்பதால் அவர்களின் கோரிக்கை படி கயல் கவனிப்பில் இருக்கும் நபரை கொலை செய்ய சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். இதை எப்படி சமாளித்து குடும்பத்தையும் அந்த நபரையும் காப்பாற்ற போகிறார் என்பதை நோக்கி கதை விறுவிறுப்பாக அமைந்து வருகிறது.
சிங்க பெண்ணே: தொடர்ந்து முதலிடத்தில் இடம் பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் 9.2 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. ஆனந்தியை எப்படியாவது ஏமாற்றி காதலிக்க வைத்து விட வேண்டும் என்று நந்தா பல கோல்மால்களை பண்ணி வருகிறார். ஆனாலும் அன்பு மற்றும் மகேஷ் இருக்கும் வரை ஆனந்தி கிட்ட எந்த தீய சக்தியும் நெருங்க வாய்ப்பில்லை. இருந்தபோதிலும் அன்பு எப்பொழுது அழகனாக ஆனந்தி முன்னாடி போய் நிற்கப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.