ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 6 சீரியல்கள்.. புது வருகையால் திணறும் டாப் டிவி சேனல்கள்

TRP Rating This Week: வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை தான் அனுதினமும் மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. அதிலும் சீரியல் மட்டும் ஒளிபரப்பு செய்யவில்லை என்றால், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கெல்லாம் பைத்தியமே பிடித்து விடும். அந்த அளவிற்கு சீரியல்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.

அதிலும் ஒவ்வொரு வார இறுதியில் எந்த சீரியலை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10  சீரியல்கள் எவை என்பதை பார்ப்போம்.

Also Read: ஈஸ்வரியை வைத்து டீல் பேசும் குணசேகரன்.. கம்பெனி எனக்கு பொண்டாட்டி உனக்கு

10-வது இடத்தில் ஜீ தமிழ் மானத்தை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியல் பிடித்துள்ளது. 9-வது இடத்தை கூட்டுக் குடும்ப மகத்துவத்தை காண்பிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்துள்ளது. 8-வது இடத்தை அயன் லேடி ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் பாக்யாவின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக 7-வது இடத்தை புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை என்ற  சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் கதாநாயகி மீனா மற்றும் கதாநாயகன் முத்து-வை சின்னத்திரை ரசிகர்கள் தங்கள் வீட்டு மகன் மருமகளாகவே பார்க்கின்றனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் அவர்களுக்கு நெருக்கமாகிவிட்டது.

Also Read: இருக்கிற பிரச்சனையில் ஏழரையை கிளப்பிய ஐஸ்வர்யா.. கதிகலங்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

6-வது இடத்தை Mr. மனைவி சீரியலும், 5-வது இடத்தை சுந்தரி சீரியலும் பிடித்துள்ளது. 4-வது இடம் புத்தம் புது சீரியலான இனியா சீரியல் பெற்றுள்ளது. 3-வது இடம் அண்ணன் தங்கையின் பாசத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்துள்ளது.

2-வது இடம் ஆதி குணசேகரனின் நக்கல் நையாண்டிக்கு குறைச்சல் இல்லாமல் இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் பெற்றுள்ளது. இதில் நான்கு  மருமகள்கள் தங்களது சுயமரியாதையை மீட்டெடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பாக செல்வதால் இதற்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.

Also Read: 40% சொத்தும் போச்சு இப்ப குணசேகரன் பொண்டாட்டியும் போச்சு.. காதலை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடும் ஜீவானந்தம்

முதல் இடத்தை அதிரடி காதல் கதைக்களத்தை கொண்ட கயல் சீரியல் பெற்றுள்ளது. இந்த சீரியல் கடந்த பல மாதங்களாகவே முதல் இடத்தை தக்க  வைத்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து முதல் ஆறு இடங்களையும் சன் டிவி சீரியல் பெற்று சின்னத்திரையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. சன் டிவி சீரியல்களை பின்னுக்குத் தள்ள முடியாமல் விஜய் மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றனர்.

Trending News