Top 6 Serial TRP ratings: எப்படி வெள்ளித்திரையில் ஹீரோக்கள் போட்டி போட்டு நீ நான் என்று மோதி கொள்கிறார்களோ, அதேபோல சின்னத்திரையில் எந்த சேனல்கள் டாப்பில் இருக்கிறது என்று போட்டி போட்டு காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்து முதல் ஆறு இடத்தை எந்த சீரியல்கள் பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அதன்படி கடந்த சில வாரங்களாக மல்லி சீரியல் 6.93 புள்ளிகளை பெற்று 6வது இடத்தை கெட்டியாக பிடித்து விட்டது. வெண்பா ஆசைப்பட்டபடி அப்பாவிற்கு எப்படியாவது மல்லியை கல்யாணம் பண்ண வைத்து தனக்கு ஒரு அன்பான அம்மா கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் வழக்கம் போல் இதை கெடுத்து விடுவதற்கு வீட்டில் விஜய்யின் அக்கா மற்றும் மகள் பல சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள். இதையெல்லாம் முறியடித்து மல்லி, வெண்பா ஆசையை நிறைவேற்றும் விதமாக நளினி கூடவே இருந்து அனைத்து விஷயங்களையும் பார்த்து வருகிறார்.
புதிதாக நுழைந்து கலக்கும் மருமகள் சீரியல்
அடுத்ததாக விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் இருந்தாலும் இந்த ஒரு சீரியல் டாப் 6 இடத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 7.94 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தை சிறகடிக்கும் ஆசை சீரியல் பெற்று இருக்கிறது. இன்னும் இந்த நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேற வேண்டும் என்றால் ரோகினி பற்றிய அனைத்து விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தால் நாடகம் சூடு பிடித்து டிஆர்பி ரேட்டிங்கை பிச்சு உதறி விடும்.
இதனைத் தொடர்ந்து அண்ணன் தங்கையின் பாசங்களை வைத்து பல வருடங்களாக ஓட்டி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 8 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. ஏற்கனவே சின்ராசு மற்றும் துளசி பிரிந்து சித்திரவதை படும் நிலையில் இன்னும் கூட டார்ச்சரை அனுபவிக்கும் விதமாக வெற்றி மறுபடியும் ரீஎன்டரி கொடுக்கப் போகிறார்.
அடுத்ததாக இந்த நாடகம் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் ஆகிறது. ஆனாலும் தொடர்ந்து இரண்டாவது இடம் மூன்றாவது இடம் என மாறி மாறி டிஆர்பி ரேட்டிங்கில் வலம் வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மருமகள் சீரியல் 8.12 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தை பெற்றிருக்கிறது. தாராள பிரபுவாக இருக்கும் ஆதிரைக்கும், மகா காஞ்சனா இருக்கும் பிரபுவுக்கும் நடந்த யுத்தத்தில் இவர்கள் கல்யாணம் குடும்பத்தில் எந்த அளவிற்கு குழப்பத்தை உண்டாக்க போகிறது என்பதை காட்டும் விதமாக கதை நகர்ந்து வருகிறது.
இதற்கு அடுத்ததாக இதுவரை எதையும் தாங்கும் கல்லாக இருந்த கயல், தற்போது எழிலை கல்யாணம் பண்ண முடியாது என்று தெரிந்ததும் மொத்தமாக உடைந்து போய் முடங்கி விட்டார். இதுதான் வேணும் என்று சொல்வதற்கு ஏற்ப கயலின் நிலைமை மோசமாகி விட்டதால் பெரியப்பாவின் கை ஓங்கப் போகிறது. இனி மொத்த குடும்பமும் பெரியப்பாவிடம் சிக்கி அடிமையாகுமா? என்பதை நோக்கி கதை பயணிக்க போகிறது. அந்த வகையில் 9.23 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்தை பிடித்திருக்கிறது.
அடுத்ததாக 9.29 புள்ளிகளை பெற்று இந்த வாரம் சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் ஆனந்திக்கு யார் அழகன் என்று உண்மை தெரியாமல் மொத்த குழப்பத்திற்கும் காரணமான அன்பு வாயை திறக்காத வரை ஆனந்தி பிரச்சினை தீர போவதில்லை. அதற்குள் இந்த மகேஷ் வில்லனாக மாறி ஆனந்தியை கரம் பிடித்து விடுவார் போல. ஆனால் அதற்கும் வழி விடாமல் மித்ரா பல சகுனி வேலைகளை பார்த்து ஒரு முக்கோண காதலில் ஏகப்பட்ட சிக்கலை சந்தித்து வரும் கதையாக இருக்கிறது.
- TRP Rating: டிஆர்பி யில் கொடி கட்டி பறக்கும் டாப் 6 சீரியல்கள்
- இந்த 5 காரணங்களால் எதிர்நீச்சல் சீரியலுக்கு சங்கு ஊதிய சன் டிவி
- TRP Rating: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 சீரியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்