ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மிக்ஜாம் புயலிலும் டிஆர்பி-ஐ தக்க வைத்த டாப் 6 சீரியல்கள்.. எப்போதுமே NO.1ல் இருக்கும் சில்வண்டு

Top 6 serials TRP ratings: மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போய் இருக்கும் நிலையிலும், சின்னத்திரை டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை பிரபல சேனல்கள் தக்க வைத்துள்ளது. அதிலும் முதலிடத்தை வழக்கம் போல் புத்தம் புது சீரியல் தான் பிடித்து மாஸ் காட்டி இருக்கிறது.

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 10-வது இடம் ஆஹா கல்யாணம் சீரியலுக்கும், 9-வது இடம் சிறகடிக்க ஆசை சீரியலுக்கும், 8-வது இடம் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 7-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் இருக்கிறது. 6-வது இடத்தில் இனியா சீரியல் உள்ளது.

இதில் கடந்த சில நாட்களாக பழைய ஞாபகங்கள் வந்த விக்ரம் இனியாவை படாத பாடு பாடுத்துகிறார். 5-வது இடத்தில் தங்கை துளசியின் வாழ்க்கையை காப்பாற்றப் போராடும் அண்ணன் சின்ராசுவின் பாச போராட்டத்தை காண்பிக்கும் வானத்தைப்போல சீரியல் உள்ளது.

Also read: எதிர்நீச்சல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம்.. சீன் போடும் ஜனனிக்கு இவ்வளவு சம்பளமா?

இந்த வார டிஆர்பி-யில் இருக்கும் டாப் 6 சீரியல்கள்

4-வது இடத்தில் குணசேகரனின் கொட்டத்தை அடக்க போராடும் நான்கு மருமகள்களின் எதிர்நீச்சலை காண்பிக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. 3-வது இடத்தில் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கு கிடைத்துள்ளது.

2-வது இடத்தில் பல பிரச்சனைகளை ஒத்த ஆளாக சுமந்து கொண்டிருக்கும் கயலுக்கு கிடைத்திருக்கிறது. முதல் இடத்தில் சில்வண்டு போல் இருந்து கொண்டு சிங்கம் போல் சீரும் ஆனந்தியின் சிங்கப் பெண்ணே சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

Also read: 2023ல் மாஸ் காட்டிய டாப் 5 சேனல்கள்.. முதல் இடத்திற்கு கடும் போட்டி போட்ட சன், விஜய் டிவி

Trending News