Serial Trp Rating : ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் வைத்து தான் எந்த சீரியல் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் என்பது கணக்கிடப்படும். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பியில் எகிறிய முதல் ஆறு சீரியல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியில் சிறகடிக்கும் ஆசை முதல் இடத்தை பெற்று வரும் நிலையில் இந்த முறையும் 8. 92 ரேட்டிங்கை பெற்று முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இதனால் சன் டிவி சீரியல் இரண்டாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிங்க பெண்ணே சீரியல் 8.18 எடுத்து இரண்டாவது இடமும், கயல் சீரியல் 7.78 மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தொடர்ந்து நான்காவது இடத்தையும் சன் தொலைக்காட்சி தான் பெற்றிருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்
அதாவது மருமகள் சீரியல் 7.65 ரேட்டிங்கை பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தை விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடர் பெற்றிருக்கிறது. இப்போது சுவாரஸ்யமான கதை களத்துடன் நகர்ந்து வருவதால் 7.47 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல தொடர் 7.16 ரேட்டிங் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து 7 இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்2, எட்டாவது மல்லி, ஒன்பதாவது இடத்தில் சுந்தரி மற்றும் பத்தாவது இடத்தில் சின்ன மருமகள் போன்ற தொடர்கள் உள்ளது.
சன் டிவி தொடர்கள் முதல் பத்தில் நிறைய இடங்கள் பெற்றிருந்தாலும் எதிர்நீச்சல் தொடர் முடிந்ததை அடுத்து முதல் இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விஜய் டிவியின் சிறகடிக்கும் ஆசை தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது.
நம்பர் ஒன் இடத்தில் சிறகடிக்கும் ஆசை
- டிஆர்பி ரேட்டிங்கை தலைகீழாக மாற்றிய 6 சீரியல்கள்.. சிங்கபெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் ஆட்டநாயகன்
- முத்து அழுது புலம்பியும் கல்நெஞ்சகாரி ஆக இருக்கும் விஜயா
- 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்