புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இந்த வார டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 6 சீரியல்கள்.. சன் டிவியை பின்னுக்கு தள்ள முட்டி மோதும் விஜய் டிவி

Top 6 TRP Serial: மக்களின் பொழுதுபோக்காக சின்னத்திரை மூலம் பல சீரியல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் புத்தம் புது நாடகங்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் டிஆர்பி-யில் கலக்கி வரும் சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

இனியா: விக்ரமின் தங்கை வாழ்க்கைக்காக போராடி தற்போது இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் சித்திரவதை அனுபவித்து வருகிறார் இனியா. இதையெல்லாம் தெரிந்து கொண்ட விக்ரம் எப்படியாவது இனியவை காப்பாற்றி விட வேண்டும் என்று போராடி வருகிறார். அந்த வகையில் விறுவிறுப்பான கதைகளத்துடன் 7.80 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தைப் பெற்று இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் முதலிடத்தை பிடித்து 7.91 புள்ளிகளை பெற்று டிஆர்பி-யில் ஐந்தாவது இடத்திற்கு சிறகடிக்கும் ஆசை சீரியல் முன்னுக்கு வந்திருக்கிறது. எப்படியாவது முட்டி மோதியாவது சன் டிவியை பின்னுக்கு தள்ளிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் முத்து மற்றும் மீனாவின் எதார்த்தமான நடிப்பு ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.

அரைச்ச மாவை அரைக்கும் இரண்டு சீரியல்கள்

வானத்தைப்போல: அண்ணன் தங்கையின் பாசத்தை வைத்து மற்றவர்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாத சின்ராசு. துளசியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சதி தீட்டி சிக்கலில் மாட்ட வைக்கிறார் பொன்னி. கதையே இல்லாமல் அரச்ச மாவை அரைத்துக் கொண்டு மட்டமாக உருட்டி வரும் இந்த வானத்தைப்போல சீரியல் 8.09 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தைப் பெற்று இருக்கிறது.

எதிர்நீச்சல்: குணசேகரனும் உமையாளும் சேர்ந்து தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று சூழ்ச்சி பண்ணி வருகிறார்கள். இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று நான்கு மருமகளுடன் சேர்ந்து கதிர் ஆடு புலி ஆட்டம் ஆடி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது டிஆர்பி ரேட்டிங்கில் 8.74 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

கயல்: கயலும் எழிலும் காதலித்து கல்யாணம் பண்ணலாம் என்று முடிவெடுத்த நிலையில் பெரியப்பாவின் சூழ்ச்சியால் ஒவ்வொரு தடங்கல்களையும் சந்தித்து வருகிறார் கயல். போதாக்குறைக்கு கயலின் தம்பியும் தற்போது எதிராக மாறி விட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பித்து எப்படி எழிலுடன் சேரப் போகிறார் என்பது விறுவிறுப்பாக கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் 9.68 புள்ளிகளைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

சிங்க பெண்ணே: இந்த நாடகம் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் 10.15 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதில் அன்புவின் காதல் நிறைவேறுமா அல்லது மகேஷ் காதல் கை கொடும்மா என்பது புரியாத புதிதாக இருக்கிறது. இதற்கிடையில் ஆனந்தி, அழகனை நினைத்து காதலிக்க ஆரம்பித்து விட்டார். இதையெல்லாம் கெடுக்கும் விதமாக மித்ரா சதி வேலைகளை செய்து வருகிறார்.

Trending News