கொரோனா வைரஸால் திரையுலகமே ஆட்டம் கண்டுள்ள நிலையில் அனைத்து படங்களும் இணையத்திலேயே வெளியாகி வருகிறது. இந்த சூழலில் 2021 முதல் அரையாண்டில் வெற்றி பெற்ற தமிழ் படங்களில் முதல் ஆறு இடத்தை பிடித்த பட வரிசைகள் என்னவென்றால்,
மாஸ்டர்: இளையதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் படமானது ரசிகர்களின் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் மிகவும் புகழ் பெற்ற திரைப்படமாகும்.
டெடி: நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா சைகல் ரியல் ஜோடிகள் இணைந்து நடித்த டெடி திரைப்படமானது நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதில் நடித்த டெடிபியர் கதாபாத்திரம் ஆனது இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
கர்ணன்: இந்தப் படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான புரட்சிகர திரைப்படமாக அமைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசியமான தேவைகளை உரக்க கூறும் திரைப்படமாக கர்ணன் அமைந்தது. மேலும் இந்த படமானது தமிழ் சினிமாவின் உத்வேகமாக எடுத்துக் காண்பிக்கப்பட்டது.
மண்டேலா: எப்போதும் நகைச்சுவை நடிகராக வலம்வந்த யோகிபாபு, கூர்க்கா படத்திற்கு பிறகு மண்டேலா படத்திலும் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் மூலம் ஒரு மனிதன் அறியாமையில் இருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை யோகி பாபு தனது இயல்பான நடிப்பினால் வெளிக்காட்டி இருப்பார்.
நெஞ்சம் மறப்பதில்லை: குடும்ப பாங்கான திரைப்படமாக உருவாக்கப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படமானது, எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தப் படம் பல ஆண்டுகளாக வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு 2021 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் வெற்றி கண்டது.
ஏலே: சமுத்திரக்கனி, கே மணிகண்டன் நடிப்பில் வெளியான ஏலே திரைப்படமானது நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்ட திரைப்படமானது. இந்த படத்தில் தந்தை மகனுக்கும் இடையே உள்ள பாசப் போராட்டத்தை வெளிக்காட்டும் விதமாக உருவாக்கப்பட்டது படத்தின் சிறப்பாக அமைந்தது.