வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பல கோடிகளில் புரளும் முதல் 8 நடிகர்கள்.. சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

Actor Surya: இப்போது படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் நடிகர்களின் சம்பளம் தான் அதிகமாக உள்ளது. அவ்வாறு தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களின் சம்பள விவரத்தை கேட்டால் தலையே சுற்றுகிறது. அந்த அளவுக்கு கோடிகளில் புரளிகிறார்கள். இப்போது டாப் நடிகர்களின் சம்பள விவரத்தை பார்க்கலாம்.

அதன்படி முதல் இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார். அதாவது தளபதி 68 படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி சம்பளம் பெற இருக்கிறார் விஜய். இவருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குகிறார். விஜய்க்கும் இவருக்கும் கிட்டத்தட்ட 100 கோடி வித்தியாசம் இருக்கிறது.

Also Read : விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உலகநாயகன் கமலஹாசன் இருக்கிறார். தற்சமயம் இவர் ஒரு படத்திற்கு 90 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் அஜித் 85 கோடி சம்பளம் வாங்குகிறார். தொடர்ந்து மூன்று படங்கள் ஒரே கூட்டணியில் இருந்ததால் அஜித்தின் சம்பளம் உயராமல் இருந்தது. இப்போது லைக்கா உடன் கூட்டணி போட்ட நிலையில் அடுத்தடுத்த படங்களில் சம்பளம் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

அஜித்துக்கு அடுத்த இடத்தில் சிம்பு இருக்கிறார். மாநாடு படத்தால் இவரது சம்பளம் அதிகபடியாக உயர்ந்து இருக்கிறது. சம்பள விஷயத்தில் தனுசையே பின்னுக்கு தள்ளி உள்ளார். அதன்படி சிம்பு ஒரு படத்திற்கு 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அடுத்தடுத்த படங்களிலும் தனது சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தும் திட்டத்தில் சிம்பு இருக்கிறார்.

Also Read : விஜய்யிடம் காரை பரிசாக வாங்க 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

ஆறாவது இடத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அவருடைய படங்கள் 100 கோடி வசூல் செய்து வரும் நிலையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒரு படத்திற்கு சிவகார்த்திகேயன் தற்போது 35 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். சிவகார்த்திகேயனை விட 10 கோடி குறைவாக தனுஷ் பெறுகிறார்.

தனுஷ் தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வருவதால் இப்போது அவருடைய சம்பளம் 25 கோடி மட்டும் தான். மேலும் கடைசியாக எட்டாவது இடத்தில் சூர்யா இருக்கிறார். அதன்படி ஒரு படத்திற்கு சூர்யா 20 கோடி சம்பளம் பெறுகிறார். பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் வாங்குகிறார்.

Also Read : 2024 சூர்யாவின் அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள்.. வாடி வாசலில் சீரும் காளையாய் சினம் கொண்ட ரோலக்ஸ்

Trending News