திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் முதல் 8 நடிகைகள்.. 40 வயதில் அம்மா நயனை பின்னுக்கு தள்ளிய திரிஷா

Actress Trisha: சமீபத்தில் டாப் நடிகர்களின் சம்பள விபரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது. விஜய் 200 கோடி, ரஜினி 100 கோடி என சம்பளம் பெற்று வருகிறார்கள். அதேபோல் ஹீரோவுக்கு சளைத்தவர்கள் நாங்கள் இல்லை என ஹீரோயின்களும் கோடிகளில் சம்பளம் வாங்கி குவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல் 8 இடங்களில் உள்ள நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

தமன்னா ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இவர் இப்போது எட்டாவது இடத்தில் உள்ள நிலையில் தமன்னாவுக்கு முன்னதாக ரகுல் ப்ரீத்தி சிங் 3.5 கோடி சம்பளம் பெறுகிறார். மேலும் அதிர்ச்சி தரும் விதமாக ஆறாவது இடத்திற்கு சமந்தா தள்ளப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற்று வருவதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read : மில்க் பியூட்டி தமன்னாவை வலையில் சிக்க வைத்த விஜய்.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டான்

எனவே சமந்தாவின் பட வாய்ப்பு குறைந்து வருவதால் சம்பளமும் குறைந்துள்ளது. அதன்படி சமந்தா ஒரு படத்திற்கு மூன்றிலிருந்து ஐந்து கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இவருக்கு முன்னதாக அனுஷ்கா ஷெட்டி ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் பெறுகிறார். நாலாவது இடத்தில் நடிகை பூஜா ஹெட்டே இருக்கிறார்.

இவரின் படங்கள் தொடர் தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தனது மார்க்கெட்டை சரியா விடாமல் பூஜா ஹெக்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். அதன்படி ஒரு படத்திற்கு 5 கோடி வரை இவர் சம்பளம் பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி இருக்கிறார்.

Also Read : ராஷ்மிகா இடத்தை தட்டிப் பறித்த சமந்தா.. குடியும், கும்மாளமுமாக இளம் ஹீரோவுடன் வெளியான புகைப்படம்

தளபதி 68 படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது ஸ்ரீநிதி 7 கோடி ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வருகிறார். எப்போதுமே முதலிடத்தில் இருந்த நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானதால் முதல் இடத்தை பறி கொடுத்த விட்டார்.

இப்போது நயன்தாரா ஒரு படத்திற்கு 5 லிருந்து 9 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். மேலும் திரிஷா 10 கோடி சம்பளம் வாங்கி முதலிடத்தில் உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள குந்தவைக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவரின் சம்பள உயர்வுக்கு இதுதான் காரணம்.

Also Read : திரிஷாவுக்கு பின் வந்து காணாமல் போன 6 நடிகைகள்.. 40 வயதிலும் நயன்தாராவை ஓரங்கட்டிய குந்தவை

Trending News