சொதப்பல், பிளாப், தோல்வி என்ற சொல்லப்படும் படம் ஒன்று பீஸ்ட், விக்ரம் படங்களின் வசூலை முறியடித்து இருக்கிறது . ‘FDFS’ எனப்படும் முதல் நாளில் முதல் ஷோ என்பது மிகப்பெரிய கிரேஸாக மாறிவிட்டது. தங்களுக்கு பிடித்தமான நடிகர்களுக்காக, படத்தின் கதையை மற்றவர் சொல்லும் முன் பார்த்து விட வேண்டும் என்பதற்காக, ட்விட்டர் , யூடியூபில் விமர்சனங்கள் சொல்வதற்காக என பல்வேறு காரணங்களுக்காக முதல் ஷோவை பார்கின்றனர்.இந்த வருடத்தின் டாப் 8 ஒப்பனர்ஸ் கொண்ட 8 திரைப்படங்கள்.
8.விருமன் : சூர்யாவின் சொந்த தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி, கருணாஸ், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், வடிவுக்கரசி நடித்த இந்த படம் கடந்த வெள்ளி அன்று திரைக்கு வந்தது. இந்த படம் முதல் நாளிலேயே 8.21 கோடி வசூல் கொடுத்துள்ளது.
7.KGF 2 : இந்த படத்தின் முதல் பாகமே, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தங்க சுரங்கத்திற்காக பொதுமக்களை அடிமைபடுத்தியவர்களை யாஷ் அழிப்பதாக முதல் பாகத்தில் இருந்தது, இரண்டாம் பாகத்தில் அந்த தங்க சுரங்கத்திற்கு அவரே முதலாளியாக இருப்பதாக கதை இருக்கும். பீஸ்ட் படத்துடன் சேர்ந்து ரிலீஸ் ஆகி இருந்தாலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 8.24 கோடி.
6. டான் : உச்ச நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் போலவே, சிவகார்த்திகேயனின் படங்களுக்கும் இப்போது கிடைக்கிறது. டான் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் உருவான திரைப்படம், இதன் முதல் நாள் வசூல் மட்டும் 9.47 கோடி.
5. RRR : பாகுபலியை போன்று மற்றுமொரு கதையை கொடுத்து, ராஜமௌலி அதில் ஜெய்த்தும் விட்டார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆரின் நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கும். தமிழ்நாட்டில் இந்த படத்திற்கான முதல் நாள் வசூல் 12.73 கோடி.
4. எதற்கும் துணிந்தவன் : ஜெய் பீம், சூரரை போற்று போன்ற பிரமாண்ட படைப்புகளை கொடுத்து விட்டு, மீண்டும் தன்னுடைய பழைய பாணியில் ‘வேல்’ போன்று ஒரு குடும்ப பின்னணியை மையமாக கொண்ட எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்தார். இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். இந்த படத்தின் முதல் நாள் வசூல் 15.21 கோடி.
3. விக்ரம் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலுக்கு பல ஆண்டுகள் கழித்து கிடைத்த மிகப்பெரிய வெற்றி படம் விக்ரம். இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல், இந்திய ரசிகர்களும் பாராட்டினார். கமலஹாசனின் இந்த படம் முதல் பெற்ற வசூல் 20.61 கோடி
2. பீஸ்ட் : தளபதி விஜய் பாக்ஸ் ஆபீஸின் கிங் என்றே சொல்லலாம். சமீபத்தில் அவர் படங்களின் மீது போடப்படும் செலவுகள் அதை விட பல மடங்காகவே விநியோகஸ்தர்களுக்கு திரும்ப கிடைக்கிறது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 26.40 கோடி.
1. வலிமை : அஜித்தை பற்றி எத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், அவருடைய ரசிகர்களிடம் அஜித்திற்கான வரவேற்பு குறையவே இல்லை. 2022 ஆம் ஆண்டு வெளியான அத்தனை படங்களில் வலிமை தான் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் உள்ளது. வலிமை படத்தின் முதல் நாள் வசூல் 36.17 கோடி.