தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அந்த பிரைட் நடிகர் சமீபகாலமாக படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களை தயாரிக்கவும் செய்தார். ஆனால் இது எல்லாமே குறிப்பிட்ட நிபந்தனையால் மட்டும்தான் செய்தார் என்ற விஷயம் தற்போது தான் வெளிவந்துள்ளது.
அந்த முன்னணி வாரிசு நடிகர் கடைசியாக நடித்த சில படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் பெரிய அளவு அந்த நடிகரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வரவில்லையாம். அப்படியே அந்த நடிகரை வைத்து படம் தயாரித்தாலும் ஒருவேளை படம் சரியாக போகவில்லை என்றால் உடனடியாக இன்னொரு படம் செய்து தர வேண்டும் என டார்ச்சலாம்.
முன்னர் இருந்த அளவுக்கு அந்த நடிகருக்கு கடந்த சில வருடமாக சரியான படங்கள் அமையாததால் தயாரிப்பாளர்களின் கெடுபிடிகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாராம் அந்த முன்னணி நடிகர். பொறுத்தது போதும் பொங்கியெழு என கடந்த சில வருடத்தில் மட்டும் பல படங்களை தயாரித்து நடித்துள்ளார்.
தன்னுடைய மனைவியை வைத்தும் பல படங்களை தயாரித்தார். அந்த படங்கள் அனைத்துமே தோல்வியைத்தான் சந்தித்து. இங்குதான் விதி விளையாடி கடனாளியாக மாறினாராம். கடைசி முயற்சியாக அந்த நடிகர் தயாரித்து நடித்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடி தளத்திற்கு சென்றது.
ஒருவேளை தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றால் கேரியர் கேள்விக்குறிதான் என முடிவு செய்து ராஜதந்திரமாக ஒடிடியில் ரிலீஸ் செய்து விட்டாராம். மேலும் அந்த படத்திற்காக பிரபல பைனான்சியரிடம் கிட்டத்தட்ட பல கோடிகளுக்கு மேல் கடன் வாங்கியிருந்தாராம்.
அது வட்டி போட்டு குட்டி போட்டு தற்போது 40 கோடியை தாண்டி விட்டது என்கிறார்கள். அதனால்தான் அவசர அவசரமாக அந்த படத்தை வெளியிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாராம். ஆனால் இது புரியாத தியேட்டர்காரர்கள் இனி அந்த நடிகரின் படத்தை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என ஒன்றுக்கு இரண்டு முறை கூறி விட்டனர்.
அதுமட்டுமில்லாமல் அந்த நடிகரின் படங்கள் சமீபகாலமாக தமிழ் படமா அல்லது தெலுங்கு படமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இரண்டும் கலந்த கலவையாகவே இருந்து வருகிறது. இந்த குழப்பம் அந்த நடிகருக்கே உள்ளதாம்.
இரண்டு பக்கமும் கணிசமான ரசிகர்கள் இருப்பதால் யாரை திருப்தி படுத்துவது என்று புரியாமல் சொதப்பியது தான் கடந்த சில வருட தோல்விக்கு காரணம் என்கிறார்கள். இதன் காரணமாகவே தற்போது வெளி தயாரிப்புகளில் நடித்து அந்த தயாரிப்பாளர்களின் மூலம் மீண்டும் திரையரங்குகளில் வலம் வரலாம் என யோசித்துள்ளாராம்.
சொந்தப்படம் எடுத்தால் வச்சி செய்து விடுவார்கள் என முன்கூட்டியே தெரிந்து விவரமாக செயல்படுகிறாராம் அந்த பிரைட் நடிகர்.