ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தயாரிப்பாளர்களை சோதிக்கும் முன்னணி நடிகர்.. கொஞ்ச நாளாவே இவரு போக்கு சரியில்லையாமே!

முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனித்தனியே ரசிகர்கள் இருந்தாலும் இந்த ஒரு குறிப்பிட்ட நடிகரின் படத்தை மட்டும் அனைத்து தரப்பு ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு தலைக்கனம் இல்லாத மனிதர். ஆனால் சமீபகாலமாக இந்த நடிகரின் போக்கு சரியில்லை என கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் எழுந்துள்ளது.

முன்னரெல்லாம் எதுவாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளும் அந்த நடிகர் தற்போது ஒவ்வொரு விஷயத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம். மேற்கொண்டு தயாரிப்பாளர்களை தவிக்க விடுவதே சமீபகாலமாக இவருக்கு வேலை என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். ஈகோ இல்லாத இந்த நடிகரா இப்படி மாறிட்டாரு என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த முன்னணி நடிகர் சமீபகாலமாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஸ்டைலிஷ் இயக்குனரை நம்பி நடித்த படமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு சமீபத்தில் நடித்த பாம்பின் பெயரைக் கொண்ட படமும் இறுதிகட்ட படப்பிடிப்புகளுக்குச் செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே நடிகர் தானாம். அந்த படத்தை இயக்கி வரும் இளம் இயக்குனர் குறித்த தேதியில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் மேற்கொண்டு அந்த முன்னணி நடிகரிடம் கால்சீட் கேட்டதால் தற்போது படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என தொந்தரவு செய்து வருகிறாராம்.

அந்த பட தயாரிப்பாளரோ சமீபத்தில்தான் ஒரு பெரிய நடிகரின் படத்தை ரிலீஸ் செய்ய ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து சரியாகி கொஞ்சம் மன நிம்மதி அடைந்தாராம். ஆனால் திடீரென இந்த நடிகர் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டதாக தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி வருத்தப்படுகிறாராம்.

மார்க்கெட் இல்லாத அந்த முன்னணி நடிகருக்காக இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்துக் கொண்டிருந்த போதும் அந்த நடிகர் புரிந்து கொள்ளாமல் இப்படி செய்கிறாரே என புலம்புகிறாராம். இந்த நடிகர் தன்னுடைய ஆரம்பகால படங்களில் பல தயாரிப்பாளர்களை சினிமாவை விட்டே விரட்டி இருக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒரு சிலரோ, அந்த நடிகர் இப்படியெல்லாம் செய்ய மாட்டாரே, ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என ஒன்றும் புரியாமல் குழம்பித் தவிக்கிறார்களாம். வெற்றிப்படம் இல்லாத விரக்திதான் அவரை இப்படி செய்ய வைக்கிறது என அவரது வட்டாரங்களில் கூறுகிறார்களாம்.

- Advertisement -

Trending News