வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு வில்லனாக இந்த முன்னணி நடிகர்? அவருக்கு கிறுக்கு புடிச்சிருக்கா என்ற தயாரிப்பாளர்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வாய்ப்பு அசால்டாக காமெடி நடிகர் சூரிக்கு கிடைத்தது கோலிவுட் வட்டாரங்களில் பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஒரு காலத்தில் காமெடியனாக வலம் வந்த சூரியின் காமெடி காட்சிகள் சமீபகாலமாக பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே அவரது காமெடி காட்சிகள் எடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஹீரோவாக ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என ஆசைப்பட்ட சூரிக்கு அல்வா கிடைத்தது போல வந்தது வெற்றிமாறனின் பட வாய்ப்பு.

முதலில் இந்த படம் துபாயில் எடுக்க இருந்த நிலையில் தற்போது நிலைமை சரியில்லாததால் தமிழ்நாட்டுக்கு ஏற்றபடி கதையை மாற்றி விட்டார்களாம். மேலும் சூரி மற்றும் வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் பாரதிராஜா. ஆனால் திடீரென பாரதிராஜா அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த நிலையில் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர் கிஷோர் அந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

soori-vetrimaaran-movie
soori-vetrimaaran-movie

ஆனால் தற்போது அவரும் பேக்கடித்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தான் சூரிக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஓகே சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை, ஆனால் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டுமா என கேள்விகள் எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கும் பல தயாரிப்பாளர்களும் ஒரு காமெடியனுக்கு வில்லனாக நடித்தால் ஹீரோவாக நடிக்கும் படம் எப்படி ஓடும்? என தொடர்ந்து விஜய் சேதுபதியை குடைச்சல் கொடுத்து வருவதாக தெரிகிறது.

Trending News