வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சத்தம் இல்லாமல் நடந்த பரிசோதனை.. ரகசியத்தை காக்க டாப் நடிகர் செய்த வேலை

டாப் நடிகர் தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக மாறியிருக்கிறார். அதிலும் அவருடைய புது பட அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வாரி வழங்கியுள்ளது.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படமே என்ன நிலவரம் என சரியாக தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்பே ரிலீஸ் தேதியோடு அடுத்த படத்தை அவர் அறிவித்து விட்டார்.

உண்மையில் இதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கிறது. அதாவது நடிகருக்கு சமீபத்தில் ஒரு சிகிச்சை நடைபெற்றது. அது முடிந்து இரண்டு நாளில் அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.

ஆனால் மற்றொரு மருத்துவமனையில் ரகசியமாக முழு பரிசோதனை நடந்திருக்கிறது. அதில் அவருக்கு ஒரு சிறு பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னால் நடிகருக்கு நடந்த ஒரு விபத்து தான் இந்த அளவுக்கு சிக்கலை இழுத்து விட்டு இருக்கிறது. ஆனாலும் பயம் இல்லை என்பதால் மருத்துவர்கள் அவருக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்கள்.

அதன்படி வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறதாம். இருந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை போக்கி ரிலாக்ஸ் செய்து வருகிறார் டாப் நடிகர்.

இந்த விஷயம் மீடியாவுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் புதுப்பட அறிவிப்பை வெளியிட்டார்களாம். அதை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த போட்டோக்கள் வீடியோக்களையும் வெளியிட்டு திசை மாற்றி விட்டதாக திரையுலகில் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News