புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அநியாயத்திற்கு சம்பளம் கேட்கும் நடிகர்.. ரத்தக் கண்ணீர் விடும் தயாரிப்பாளர்கள்

சமீபத்தில் வெளிவந்த பெரிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த முன்னணி நடிகர் ஒருவருக்கு படவாய்ப்புகள் ஏகபோகமாக குவிந்து வருகிறதாம். இதனை பயன்படுத்தி சம்பளத்தை தாறுமாறாக கேட்டு வருகிறாராம் அந்த நடிகர்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடம் கிடைக்காதா என ஏங்கி ஏங்கி கடவுள் புண்ணியத்தால் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார்.

முதல் படமே தேசிய விருது வாங்கிய நிலையில் அந்த நடிகர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இவை அனைத்துமே ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல நல்ல குணச்சித்திர வேடங்கள் கிடைத்தாலும் மறுக்காமல் நடித்து வருகிறார்.

ஆனால் சம்பள விஷயத்தில் இந்த நடிகர் எல்லை மீறுவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுகள் அதிகமாக எழத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் வெளிவந்த ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடித்த அந்த நடிகர் அதன் பிறகு தன்னுடைய மார்க்கெட் உயர்ந்ததைக் கண்டு சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டாராம்.

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் எனக் கேட்டு அடம் பிடிக்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் ரத்த கண்ணீர் வடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இருந்தாலும் அந்த நடிகரை புக் செய்யுங்கள் என ஹீரோக்கள் கட்டளை போடுவதால் வேறு வழியின்றி கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுத்து வருகிறார்களாம். வருங்காலத்தை கணித்து இப்போதே நன்றாக கல்லா கட்டிக் கொள்ளும் அந்த நடிகரின் புத்திசாலித்தனத்தை பார்த்து கோலிவுட் வட்டாரம் ஆச்சரியப்படுகிறதாம்.

Trending News