பெரிய இயக்குனரை கெஞ்ச விடும் பிரபல நடிகர்.. அவர் செஞ்ச வேலை எப்படி!

actor
actor

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் சமீபகாலமாக நேரம் சரியில்லாத காரணத்தினால் எடுத்த எந்த முயற்சியும் கை கொடுக்காமல் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு முன்னணி நடிகர் ஒருவரை வேறு பகைத்துக் கொண்டாராம்.

கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க முடியாமல் தடுமாறி வருபவர் தான் அந்த முன்னணி நடிகர். அந்த இயக்குனருக்கும் அதே நிலைமைதான். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஸ்டைலிஷ் படத்தை எடுத்து வந்தனர்.

படம் நன்றாக வந்து கொண்டிருந்த நேரத்தில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை எழுதாமலேயே பாதி படப்பிடிப்புகளை முடித்து விட்டாராம் அந்த இயக்குனர். மீதி நாட்கள் நடிகர்களின் கால்ஷீட்டை வாங்கி வைத்துவிட்டு படம் எடுக்காமல் கதையையும் ஒழுங்காக எழுதி முடிக்காமல் அந்த முன்னணி நடிகரை டென்ஷன் செய்துள்ளார்.

அதன் விளைவு கடந்த நான்கு வருடமாக அந்த படம் இப்பவோ அப்பவோ என இழுத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அந்த இயக்குனர் முன்னணி நடிகரை சந்தித்து படத்திற்கு சில நாட்கள் கொடுத்தால் மொத்தமும் முடித்துக் கொடுத்து விடுவேன் என கூறினாராம்.

ஆனால் அந்த நடிகரோ, முதலில் எடுத்தவரை படத்தை போட்டுக்காட்டுங்கள் எனவும், மேலும் கிளைமாக்ஸ் காட்சி என்ன என்பதையும் இப்போதே கூறிவிடுங்கள் எனவும் கேட்டுள்ளார். நம்ம ஆளு தான் எதையும் முடிக்க மாட்டாரே, பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றிருந்த அந்த இயக்குனரை மூஞ்சியில் முழிக்காதீங்க என துரத்தி விட்டாராம் அந்த முன்னணி நடிகர்.

ஏற்கனவே வெற்றி கொடுக்க முடியாத விரக்தியில் சுற்றி வரும் அந்த முன்னணி நடிகரை செம டென்சனாகி விட்டாராம் வந்த ஸ்டைலிஷ் இயக்குனர். எவ்வளவு கெஞ்சியும் மசிய மாட்டேன் என்கிறாராம். இதனால் தன்னுடைய கேரியர் இப்படியே முடிந்து விடுமோ என சோகமே சுகமாக அங்கிருந்து நடையைக் கட்டினாராம் அந்த இயக்குனர்.

Advertisement Amazon Prime Banner