வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு அப்பாவாக முன்னணி நடிகர்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

தனுஷை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்த போதே எல்லோருக்கும் அதிர்ச்சி தான். இருந்தாலும் வெற்றிமாறன் மீது நம்பிக்கை இருப்பதால் சூரி படம் எதிர்பார்ப்பில் உள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் வடிவேலு இல்லாத சமயத்தை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் காமெடி நடிகராக மாறியவர் தான் சூரி. அடுத்த வடிவேலு என்று கூறியதாலோ என்னமோ அவரை மாறியே ஆகவேண்டும் என நினைத்து ஒரே மாதிரி காமெடி செய்ததால் ஒரு கட்டத்தில் சூரியை பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இதற்கிடையில்தான் அவ்வபோது இயக்குனர் பாண்டிராஜ் படங்கள் அவருக்கு கை கொடுத்தது. மற்ற படங்களை விட பாண்டிராஜ் படங்களில் மட்டும் சூரியின் காமெடி அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் திடீரென வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக மாறி விட்டார் சூரி. அந்த படத்தின் மீது தான் தற்போதைய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் சூரி படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.

அப்போதே விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்கும் பல தயாரிப்பாளர்களும் இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டால் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எடுபடாதே என கவலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல வெற்றிமாறன் படத்தில் சூரி தந்தையாக நடிக்க உள்ளாராம் விஜய் சேதுபதி.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai

ஏற்கனவே விஜய் சேதுபதி சொந்த தயாரிப்பில் வயதான கதாபாத்திரத்தில் நடித்த ஆரஞ்சு மிட்டாய் படம் ரசிகர்களிடையே எடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. போதாக்குறைக்கு கைவசம் 10 படங்களுக்கு மேல் அட்வான்ஸ் வாங்கி வைத்துள்ளாராம். வெற்றிமாறன் மீது நம்பிக்கை இருந்தாலும் விஜய் சேதுபதி இப்படியே செய்தால் சரி வராது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Trending News