செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வியாபாரம் ஆகாத விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்.. OTT தளங்களின் முடிவால் திக்கி திணறும் தயாரிப்பாளர்கள்!

Vijay: அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயம் தான் இப்போது பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்கள் என ஆரம்பித்ததே OTT தளங்களின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு தான்.

எவ்வளவு பட்ஜெட் போட்டு எடுத்தாலும் OTT உரிமை தொகையில் பாதியை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கைதான்.

திக்கி திணறும் தயாரிப்பாளர்கள்!

இந்த கலாச்சாரம் ஆரம்பித்தது 2020 ஆம் ஆண்டில் இருந்து. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போது OTT தளங்கள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்கினார்கள்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. அந்த நிறுவனங்களின் அலுவலகத்திற்கு தயாரிப்பாளர்கள் தேடிச் செல்லும் நிலைமை.

அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்க முடியும் என டிமாண்ட் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு காரணம் பெரிய ஹீரோக்களின் படங்களை எல்லாம் ரசிகர்கள் OTT தளத்தில் அவ்வளவாக விரும்பி பார்ப்பதாய் தெரியவில்லை.

சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் தேடித்தேடி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் தான் இப்போது இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

இயக்குனர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் இது குறித்து தன்னுடைய பேட்டியில் ஒரு சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் விஜயின் தளபதி 69, நடிகர் தனுஷின் நான்கு படங்கள், சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் என எதுவுமே இன்னும் வியாபாரம் ஆகவில்லையாம்.

இதனால் தயாரிப்பாளர்கள் திக்கித் திணறிக் கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Trending News