கோடிகளில் சம்பளம் கொடுத்து கூப்பிட்ட 66 வயது நடிகர்.. வாய்ப்பில்ல ராஜா என ஒதுங்கிய 36 வயது நடிகை

actress
actress

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காலம் கடந்தும் போற்றப்படும் வந்த நடிகர் சமீப காலமாக அந்த ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். இதன் காரணமாக சம்பளம் எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறாராம்.

முன்னணி நடிகர்களில் மூத்த நடிகராக இருக்கும் அவர் அடுத்ததாக ஒரு இளம் இயக்குனருடன் சேர்ந்து அதிரடி திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். முன்னதாக தமிழ் புத்தாண்டுக்கு குறி வைக்கப்பட்ட அந்த திரைப்படம் தற்போது எலக்சன் காரணமாக தள்ளி சென்றுள்ளது.

என்னுடைய அந்த மூத்த நடிகரின் படத்தில் யார் நடிகை என்பதை இன்னும் படக்குழுவினர் முடிவு செய்யவில்லையாம். அதற்கு காரணம் அந்த நடிகர் எப்படியாவது ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் நடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.

அவர் வேறு யாருமல்ல. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான். முன்னணி நடிகர்கள் முதல் மூத்த நடிகர்கள் வரை அனைவருடனும் ஜோடி போட்டுக் கொண்டிருக்கும் அந்த நடிகை எந்த நடிகருடன் மட்டும் ஜோடி சேர மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம்.

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ப்ளேபாய் நடிகர் என்றால் இவரை தான் சொல்வார்கள். ஏற்கனவே பல படங்களில் அந்த நடிகையை நடிக்க வைக்க கேட்டுள்ளார் அந்த நடிகர். ஆனால் முடிந்தவரை அந்த நடிகரின் படங்களில் இருந்து விலகியே இருந்து வருகிறார் அம்மணி.

இந்நிலையில் மீண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன் எப்படியாவது அவரை ஜோடி சேர்த்து விடுங்கள் என நடிகர் கேட்டாராம். 100 கோடி கொடுத்தாலும் வாய்ப்பில்ல ராஜா என டாட்டா காட்டி விட்டாராம் அந்த நடிகை.

Advertisement Amazon Prime Banner