தமிழ் சினிமாவில் நடிகைகள் யாரும் நடிக்க துணியாத ஒரு கேரக்டரில் நடித்து அதன் மூலம் பிரபலமானவர் அந்த நடிகை. அறிமுகமான படமே அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிகை தன்னுடைய சிறப்பான நடிப்பை அந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இதனால் நடிகைக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பட வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்தது.
ஆனால் நடிகையோ முன்னணி நடிகர்கள் உட்பட எந்த திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். இதற்கு முக்கிய காரணம் நடிகை நடித்த முதல் திரைப்படத்தின் இயக்குனர் தான்.
மீண்டும் அந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்கலாம் என்று காத்திருந்த நடிகைக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இயக்குனர் இதுவரைக்கும் எந்த படத்தையும் இயக்கவில்லை. இவரை நம்பி மோசம் போனேனே என்று நடிகை தற்போது புலம்பி வருகிறார்.
நடிகையின் முதல் படம் வெளி வந்து சில வருடங்கள் கடந்து விட்டதால் ரசிகர்களுக்கு தன்னை நினைவில் இருக்குமா என்றும் நடிகை நொந்தபடி இருக்கிறாராம். பல முன்னணி நடிகர்களுடன் கிடைத்த வாய்ப்பை எல்லாம் அலட்சியப்படுத்திய நடிகை தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம்.
இதுக்குத்தான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். கிடைத்த வாய்ப்பை அலட்சியப்படுத்தினால் இப்படிதான் அல்லல் பட வேண்டியிருக்கும் என்று கோடம்பாக்கத்தில் நடிகையை பற்றி சத்தமில்லாமல் கிசுகிசுக்கின்றனர்.