செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

3 கோடி சம்பளத்தை ஏற்றிய முன்னணி இளம் நடிகை.. காரணம் கேட்டு பதறிப்போன தயாரிப்பாளர்

சினிமாவில் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதில் நடிக்கும் நடிகர்கள் உட்பட அனைவரும் தங்களது சம்பளத்தை முடிந்தவரை ஏற்றி விடுவார்கள். அப்படி ஒரு கதைதான் ஒரு இளம் நடிகையின் விஷயத்திலும் நடந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த நடிகை. ஹிந்தியில் ஓரிரு படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

நடிகை அறிமுகமானது என்னவோ தமிழ் சினிமாவில் தான். ஆனால் அந்தப் படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்காததால் நடிகை தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடி போட்டு நடித்த நடிகை மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர், பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் என்று படம் பிரம்மாண்டமாக தயாராவதால் நடிகை படம் வெளியாவதற்கு முன்பே தனது சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தி விட்டாராம்.

இதுவரை ஒரு படத்திற்கு இரண்டு கோடி வாங்கிக் கொண்டிருந்த நடிகை தற்போது தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும் ஏன் இப்படி என்று நடிகையிடம் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் நடிகையோ முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து விட்டேன் இதனால் என் மார்க்கெட் எங்கேயோ செல்லப் போகிறது அதனால்தான் என் சம்பளத்தையும் ஏற்றி விட்டேன் என்று அசால்டாக கூறியிருக்கிறார்.

தற்போது நடிகை சம்பளத்தை ஏற்றிய இந்த செய்திதான் திரையுலகில் பேச்சாக இருக்கிறது. ஒரு பாட்டுக்கே முன்னணி நடிகைகள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் போது இந்த நடிகை சம்பளத்தை ஏற்றியது எல்லாம் ரொம்ப சாதாரணம் என்று பலரும் கிசுகிசுக்கின்றனர்.

Trending News