சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வாரிசு நடிகையால் கைநழுவி போன வாய்ப்பு.. விட்ட இடத்தை பிடிக்க நடிகை செய்யும் தந்திரம்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என புலம்பும் நிலைமைக்கு வந்துவிட்டார் மாஸ் ஹீரோயின். ஒரு காலத்தில் நிற்க கூட நேரம் இல்லாமல் கெத்து காட்டி வந்த நடிகைக்கு சமீப காலமாக எங்கு திரும்பினாலும் தோல்வி தான் கிடைக்கிறது.

தற்போது கைவசம் எந்த படங்களும் இல்லாத நிலையில் அவர் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டாராம். இதற்கு முக்கிய காரணம் மிகப்பெரிய வாய்ப்பு தன் கைக்கு கிடைக்கும் என நடிகை முழு நம்பிக்கையோடு காத்திருந்தாராம்.

Also read: வாரிசு நடிகையின் 14 வருட ரகசிய காதல்.. புளியங்கொம்பாக பிடித்த முதிர் கன்னி

ஆனால் சைடு கேப்பில் அதை தட்டி சென்ற வாரிசு நடிகையால் அவர் மொத்தமாக அப்செட் ஆகியுள்ளார். அதேபோல் குட்டி போட்ட பூனையாக தன்னை சுற்றி வந்த கணவனும் இப்போது பிஸியாகி விட்டார். சரி பிசினஸையாவது கவனிக்கலாம் என வந்த பக்கம் போனால் அதுவும் பெரிய அளவில் லாபம் தரவில்லையாம்.

அதனாலேயே நடிகை விளம்பரம் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதன் மூலம் கோடி கணக்கில் அவர் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் ஒரு கம்பெனியின் அம்பாசிடராக இருக்கும் நடிகைக்கு பல மடங்கு சம்பளத்தை கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தற்போது சோசியல் மீடியாவிலும் நடிகை ஆக்ட்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ, வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் திருப்பி இருக்கும் நடிகை மீண்டும் தன்னுடைய நம்பர் ஒன் இடத்தை பிடிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறாராம்.

Also read: அம்மா இருக்கும்போதே அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குனர்.. பதறிப் போன நடிகை

Trending News