தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த நடிகை. தமிழில் தன் முதல் படத்திலேயே தளபதி நடிகருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அதன் பிறகு ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்து திறமையான நடிகை என்று பெயர் பெற்றார். ஆனாலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
தெலுங்கில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார் அந்த நடிகை. அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பு யோகா டீச்சரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, இந்தி என்று திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து வந்த நடிகை தற்போது முழு மூச்சாக திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது நடிகை தமிழில் அரசியல் வாரிசு நடிகராக வலம் வரும் நடிகரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறார்.
மேலும் இந்த படத்திற்கு பிறகு தனக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க அந்த நடிகை முடிவெடுத்துள்ளார். நடிகை மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க விரும்புவதால் இயக்குனர்கள் பலரும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிப்பு தவிர ஓவியத்தில் மிகவும் ஆர்வம் கொண்ட அந்த நடிகை தன்னுடைய ஓவியங்களை அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.