வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரொமான்டிக் மூடில் சுற்றும் புருஷன்.. சக்காளத்தி பயத்தில் ஃபாலோ பண்ணும் நடிகை

பிரபல இயக்குனரை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை இப்போது குழந்தை குட்டி என வாழ்ந்து வருகிறார். குடும்பத்தை ஒரு பக்கம் கவனித்துக் கொண்டாலும் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இப்படி சதா நேரமும் பிசியாக இருக்கும் நடிகை தற்போது கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதற்கு காரணம் நடிகையின் கணவர் செய்யும் ரொமான்ட்டிக் அட்ராசிட்டி தான்.

சமீப காலமாக அவர் சக நடிகைகளுடன் ரொம்பவும் நெருக்கமாக பழகி வருகிறாராம். ஏற்கனவே இவர் மீது இப்படிப்பட்ட ஒரு கிசுகிசு இருக்கிறது.

ஆனால் நடிகையோ ரொம்பவும் ரகடான கேரக்டர். அதனாலேயே இயக்குனர் அடக்கி வாசித்து வருவார். ஆனாலும் நடிகைக்கு புருஷன் மீது இருக்கும் சந்தேகம் தீரவில்லை.

அதனாலேயே அவர் இப்போது தன்னுடைய கண்ணை சிசிடிவி கேமராவாக மாற்றிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் புருஷன் போகும் இடம் எல்லாம் இவரும் அட்டை போல ஒட்டிக் கொண்டே திரிகிறாராம்.

இத்தனை வருடங்கள் கழித்து நடிகைக்கு இப்படி ஒரு பயம் வந்ததற்கும் காரணம் இருக்கிறது. அதாவது இயக்குனருக்கு நடிகைகளை பார்த்தால் மட்டும் முகம் லைட் போட்டது போல் பிரகாசமாகி விடுகிறதாம்.

அதுவே மனைவியை கண்டால் அமாவாசை போல் இருளடைந்து விடுகிறது. இதையெல்லாம் வாட்ச் செய்த மனைவி இப்போது கணவரை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வர படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.

Trending News