நான் ஈ, மகதீரா படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலியின் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியான படம் பாகுபலி. இருபாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு வரலாற்று கதையம்சம் கொண்டது.
இதில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என ஒவ்வொரு கதாப்பத்திரங்களும கதையம்சத்தோடு ஒத்திருக்கும். இப்படி ஒரு பிரம்மாண்டமான கூட்டணியோடு பிரமாதமாய் படமாக்கியிருப்பார் இயக்குனர் ராஜமவுலி.
திரைக்கதையில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறையேணும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திஇருப்பார் இயக்குனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மாஸ் ஹிட் கொடுத்தது இரு பாகங்களும்.
இப்படி எடுக்கப்பட்ட பாகுபலி இப்போது வெப் சீரிஸாக எடுக்கப்பட உள்ளது. ராஜமாதா சிவகாமி தேவியின் இளமைக்கால வாழ்வை கதையம்சமாக கொண்டு தயாராகிறது இந்த சீரிஸ்.
முன்னதாக ராஜ மாதாவின் இளமை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் ஒத்துக் கொள்வது போல் தெரியவில்லை. ஆனால் இந்த வெப்சீரிஸில் நடிக்கும் நடிகைகளுக்கு இது மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுக்கும் என்பது மட்டும் உறுதி.
ஒரு நடிகையை நம்பி 200 கோடி பட்ஜெட் போடுவது இதுதான் முதல் முறை. இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என தனக்கு வாய்ப்பு வந்ததும் ஓகே சொல்லிவிட்டாராம் நயன்தாரா. ரம்யா கிருஷ்ணனின் இளம்வயது கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா சரியாக இருப்பார் எனவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.