திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2022-ல் வசூலைக் குவித்த 5 படங்கள்.. முதலிடத்தை விக்ரம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

2022 ஆம் ஆண்டில் இதுவரை திரைக்கு வந்த படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களின் லிஸ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சுமார் 150 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 131 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப் படங்களில் தமிழகத்தில் அதிக வசூலை குவித்த லிஸ்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இடம் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கேஜிஎப் 2 தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று 112 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் வாரி குவித்திருக்கிறது. இந்த படம் சுமார் 1,250 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலக அளவில் வசூல் செய்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து மூன்றாவதாக தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் 150 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட வலிமை திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று, தமிழகத்தில் மட்டும் 98 கோடி வசூலைக் குவித்திருக்கிறது.

இதேபோன்று பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் 550 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட  ஆர்ஆர்ஆர்  திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 82 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படம் உலக அளவில்  1,200 கோடி வசூலைக் குவித்திருக்கிறது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் மே மாதம் திரைக்கு வந்த டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 74.50 கோடி வசூலைக் குவித்திருக்கிறது. கல்லூரி வாழ்க்கையை அழகாக சித்தரித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டான் திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்தது.

இவ்வாறு 2022 ஆம் ஆண்டின் தமிழகத்தில் அதிக வசூலை குவித்த இந்த ஐந்து படங்களை பின்னுக்குத் தள்ளும் வகையில் கமலஹாசனை நான்கு வருடங்களுக்குப் பிறகு இன்று ரிலீஸான விக்ரம் படத்தின் மூலம் பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதை வைத்துப் பார்த்தால் விக்ரம் நிச்சயம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த இந்த லிஸ்டில் டாப் இடத்திற்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News