வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சந்திரமுகி 2 சாட்டிலைட் உரிமத்தை பல கோடிக்கு கைப்பற்றிய டாப் நிறுவனம்.. தலைகால் புரியாமல் ஆடும் ஆட்டம்

Chandramukhi 2: பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி அதிக நாள் திரையரங்குகளில் ஓடி வசூல் செய்த படம் தான் சந்திரமுகி. பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று சந்திரமுகி 2 படத்தின் போஸ்டர் ஒன்று ரிலீஸ் தேதியுடன் வெளியாகி இருந்தது. அதில் லாரன்ஸ் வேட்டையன் கெட்டப்பில் இருந்தார். அந்த போஸ்டர் தான் நேற்று இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவினால் சாட்டிலைட் உரிமம் பல கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

Also Read : லாரன்ஸ் படத்துல வாய்ப்பு வேணும்னா கிஸ் அடிச்சு காமி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு நடந்த கொடுமை

ஏற்கனவே இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருந்தது. இந்நிலையில் சாட்டிலைட் உரிமைத்தை சன் டிவி பெற்றிருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச தொகையை சந்திரமுகி சாட்டிலைட் உரிமம் பெற்றிருக்கிறது. அதாவது ரஜினியின் 2.o படம் 110 கோடிக்கு சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்டது.

இப்போது சந்திரமுகி 2 படத்தை சன் டிவி 120 கோடிக்கு வாங்கி இருக்கிறது. மேலும் அதிக தொகைக்கு இப்படத்தை வாங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. மேலும் சந்திரமுகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அதைவிட கூடுதல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : தம்பியை தூக்கி விட லாரன்ஸ் எடுத்துள்ள முடிவு பலிக்குமா.? குடும்பமே பேயாக இருந்தால் எப்படி மாஸ்டர்

ஆகையால் செப்டம்பர் 16 அன்று திரையரங்குகளில் சந்திரமுகி 2 படம் வெளியாக இருக்கிறது. மேலும் ஆடியோ ரைட்ஸ், ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம் ஆகியவை பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் இப்போது லைக்கா தலைக்கால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளது. ஏனென்றால் படம் ரிலீசுக்கு முன்பே நல்ல லாபம் பார்த்திருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதால் திரையரங்குகளிலும் நல்ல வசூல் வேட்டையாடும் என தெரிகிறது. ஆகையால் சந்திரமுகி 2 படத்தின் மூலம் லைக்கா நிறுவனத்திற்கு பெரிய தொகை லாபமாக சேர இருக்கிறது. அந்த வகையில் லாரன்ஸுக்கும் இப்படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த சந்திரமுகி-2 போஸ்டர்.. அனல் பறக்கும் வேட்டையனின் அடுத்த அவதாரம்!

Trending News