வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வருஷக்கணக்கா காத்திருக்கும் தனுஷ், சூர்யா.. அஜித் பக்கம் திரும்பிய டாப் இயக்குனர்

Ajith-Suriya-Dhanush: மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த கையோடு அடுத்த சம்பவத்திற்கு தயாராவார் என்று பார்த்தால் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு உலக சுற்றுப்பயணம் செய்தார். இதனால் விடாமுயற்சியின் நிலை என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தனர்.

இப்படி மாதக்கணக்கில் காக்க வைத்த இப்படத்தின் ஷூட்டிங் இப்போது வெளிநாட்டில் ஆரம்பித்திருக்கிறது. இடைவிடாமல் படத்தை முடித்து விட திட்டமிட்டிருக்கும் மகிழ் திருமேனி அதற்கான வேலையில் இப்போது தீவிரம் காட்டி வருகிறாராம். இந்த சூழலில் அஜித்தின் அடுத்த படம் யாருடன் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். ஏற்கனவே இது குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வையின் போதே இவர் அஜித்துக்காக ஒரு சூப்பரான கதையை சொல்லி ஓகே வாங்கி இருந்தார்.

ஆனால் ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போடப்பட்ட நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி வெற்றி வாகை சூடி இந்த கனவை நினைவாக்கி இருக்கிறது. இந்த சூழலில் அஜித்தின் 64 ஆவது பட இயக்குனர் யார் என்ற விஷயமும் கசிந்துள்ளது.

அந்த வகையில் பெயரிலேயே வெற்றியை தக்க வைத்திருக்கும் வெற்றிமாறன் தான் அஜித்தை இயக்கப் போகிறாராம். ஆனால் ஏற்கனவே இவருடைய விடுதலை 2 ரிலீசுக்காக தயாராகி வருகிறது. அதை அடுத்து வாடிவாசல், வட சென்னை 2 ஆகிய படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.

இதற்காகவே வருஷக்கணக்கில் சூர்யா, தனுஷ் ஆகியோரும் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் இவருடைய பார்வை அஜித் பக்கம் திரும்பி இருக்கிறது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த கூட்டணி இணைந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Trending News