ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 5 இயக்குனர்கள்.. லோகேஷை மிஞ்சிய விஜய்யின் செல்ல தம்பி

இப்போது ஹீரோக்களுக்கு இணையாக இயக்குனர்களும் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதுவும் தொடர்ந்து ஹிட் படம் கொடுத்தால் அடுத்த படத்திற்கு அதிகப்படியான சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். அப்படியாக பல கோடிகளில் சம்பளம் வாங்கும் முதல் 5 இயக்குனர்களை தற்போது பார்க்கலாம்.

வெற்றிமாறன் : இயக்குனர் வெற்றிமாறன் தனது திரை வாழ்க்கையில் ஒரு தோல்வியைக் கூட தற்போது வரை கண்டதில்லை. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் மாபெரும் வெற்றி பெற்றது. வெற்றிமாறன் ஒரு படத்திற்கு தற்போது 15 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.

Also Read : தொடர்ந்து அந்த கெட்ட பழக்கம் இருந்தால் நான் சொல்றதை கேளுங்க.. வெற்றிமாறன் கூறும் சீக்ரெட்

மணிரத்னம் : கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தால் மணிரத்னத்தின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. மேலும் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து மணிரத்தினம் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்போது அவருடைய சம்பளம் 25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு பட வேலைகளிலும் ஷங்கர் தற்போது பிசியாக இருந்து வருகிறார். அடுத்ததாக பெரிய நடிகர்களின் படங்களை இயக்கவும் ஷங்கர் திட்டம் தீட்டி உள்ளார். தற்சமயம் ஷங்கர் ஒரு படத்திற்கு 35 கோடி சம்பளம் பெறுகிறார்.

Also Read : ஆப்பிரிக்காவில் மெர்சல் பண்ணும் ஷங்கர்.. தயாரிப்பாளர் காசுக்கு கேரண்டி கிடைக்குமா?

லோகேஷ் கனகராஜ் : பெரும்பாலான நடிகர்களின் விருப்ப இயக்குனராக இருந்து வருகிறார் லோகேஷ். இவர் இப்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். மேலும் அடுத்ததாக ரஜினி படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு கிட்டத்தட்ட 40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லீ : லோகேஷ் கனகராஜை பின்னுக்கு தள்ளியுள்ளார் விஜய்யின் செல்லத்தம்பி அட்லீ. இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 50 கோடி சம்பளம் பெற்று முதல் இடத்தை அட்லீ பிடித்துள்ளார்.

Also Read : அட்லீயால் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூப்பர் ஸ்டார்.. பதட்ட நிலையில் ஷாருக்கான்

Trending News