புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகைகள்.. நிஜ வாழ்க்கையே வேறு!

தற்போதைய தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் அனைவரும் கவர்ச்சியான வேடங்களில் நடிப்பதற்கு எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடத்தில் நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருந்தனர்.

அப்போதைய கதாநாயகிகள் யாவரும் கவர்ச்சியான உடை அணிந்து இது போன்ற வேடங்களில் நடிக்க தயங்குவார்கள். அதனால் ஒரு பாடலுக்கு கிளாமர் டான்ஸ் ஆட ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, ஜோதிலட்சுமி, டிஸ்கோ சாந்தி, குயிலி,அனுராதா போன்ற பல நடிகைகள் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் அன்றைய முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களில் நடனம் ஆடியுள்ளனர் இவர்களின் நடனத்திற்கு ரசிகர்கள் பலரும் அடிமையாக இருந்தனர். என்னதான் திரையில் கவர்ச்சி நடனம் ஆடினாலும் அவர்களின் சொந்த வாழ்க்கை அதற்கு தலைகீழாக இருந்தது.

கவர்ச்சி நடிகைகள் பலரும் தங்கள் வாழ்வில் மிகவும் கண்ணியமானவர்களாகவே இருந்தனர். அதிலும் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றோர் மற்றவர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தனர். அதில் நடிகை சில்க் ஸ்மிதா திருமணம் செய்து கொண்டு ஒரு அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் நடிகை டிஸ்கோ சாந்தி, நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஸ்ரீஹரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக மரணமடைந்தார். டிஸ்கோ சாந்தி, நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவியின் அக்கா ஆவார்.

அரைகுறை ஆடையில் நடிப்பவர்கள் என்ற பிம்பம் மற்றும் விமர்சனம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி இவர்கள் அனைவரும் தற்போது தங்கள் திருமண வாழ்வில் கணவர், குழந்தைகள் என்று சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

Trending News