திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பழைய குருடி கதவைத் திறடி.. உயர்ந்த நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுக்கும் ஹீரோ

Gossip: தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர் தான் அந்த நடிகை. அழகு, உயரம் என ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் இருந்ததாலேயே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக தொடங்கினார்.

பக்கத்து வீட்டு பெண் போல ஹோம்லி லுக்கில் வலம் வந்த அவர் எல்லை மீறாத கவர்ச்சியும் காட்டினார். அந்த சமயத்தில் தான் டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

உண்மையில் நடிகை அந்த ஹீரோவின் மிகப்பெரிய ரசிகை. அதனாலயே அந்த வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டார். ஆனால் அந்த படம் முடிவதற்குள் நடிகை பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

நடிகர் கொடுக்கும் டார்ச்சர்

அந்த அளவுக்கு நடிகர் அவருக்கு அந்தரங்க தொல்லை கொடுத்திருக்கிறார். ஒரு வழியாக படத்தை முடித்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது மீண்டும் அவர் ரீ என்ட்ரி கொடுத்து கை நிறைய படங்களை கமிட் செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட அந்த எதார்த்த நடிகரின் படத்தில் இவர் நடித்திருந்தார். அது மட்டும் இன்றி அந்த டாப் ஹீரோ லெஜெண்ட் இயக்குனருடன் நடிக்கும் படத்தில் நடிகையை மீண்டும் கமிட் செய்திருக்கிறார்.

இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது மீண்டும் நடிகர் எந்த தொல்லையும் கொடுக்க மாட்டார் என நடிகையும் நம்பி அதில் நடிக்க சம்மதித்திருக்கிறார். ஆனால் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக நடிகர் ஹீரோயினிடம் மீண்டும் பழைய விஷயங்களை எதிர்பார்க்கிறாராம்.

இதனால் நடிகை சொல்ல முடியாத மன அழுத்தத்தில் இருப்பதாக திரையுலகில் கிசுகிசுத்து வருகின்றனர். எப்படியாவது இந்த படத்தை முடித்துவிட்டு இனி நடிகர் பக்கமே திரும்பக் கூடாது என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.

சமீபத்திய கிசுகிசு செய்திகள்

Trending News