மகாராஜா பட தயாரிப்பாளர், நித்திலன் சுவாமிநாதன், விஜயசேதுபதி என எல்லோரும் ஹேப்பி. சரியான சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜா. இப்பொழுது இந்த படம் தமிழையும் தாண்டி எல்லா மொழிகளிலும் ரீமேக் ஆகி வருகிறது.
வெறும் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட 150 கோடிகள் வரை வசூல் வேட்டையாடி உள்ளது. அடுத்தடுத்த விஜய் சேதுபதியின் படங்கள் நல்ல பிசினஸை பெற்று வருகிறது. சரியான ஹிட் கொடுக்காமல் திணறி வந்த விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை இந்த படம் மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளது.
அடுத்தடுத்த விஜய் சேதுபதி கையில் ஏகப்பட்ட படங்கள் குவிந்துள்ளது. விடுதலை 2, காந்தி டாக்கீஸ், இடம் பொருள் ஏவல், ட்ரெயின் என வரிசையாக பல படங்கள் விஜய் சேதுபதிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் மகாராஜா படம் பாலிவுட் வரை பல ஹீரோக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலிவுட்டில் மகாராஜா படத்தின் ஹிந்தி உரிமையை வாங்குவதற்காக பெரிய ஹீரோக்களில் அனைவரும் போட்டி போட்டு வந்தனர். கடைசியாக விஜய் சேதுபதி போலவே நடிப்பு அரக்கன் ஒருவர் இந்த படத்தின் ஹிந்தி ரைட்சை வாங்கியுள்ளார்.
இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் நடித்து இயக்குகிறார். நடிப்பு என்று வந்துவிட்டால் பட்டையை கிளப்பி விடுவார் அமீர்கான்.அதனால் இந்த படம் ஹிந்தியிலும் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என செம குஷியில் இருக்கிறார் டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன்.
பாலிவுட் நடிப்பு அரக்கனிடம் போன குப்பைத்தொட்டி
ஹிந்தி ரீமேக் உரிமைகள் மட்டுமல்லாது இந்த படத்தில் வரும் குப்பைத்தொட்டி என எல்லாவற்றையும் சேர்த்து வாங்கி விட்டாராம் அமீர்கான். இந்த படத்திற்கான நடிகர்கள் தேடும் வேலையில் இறங்கி விட்டார். ஒரு வருடத்திற்குள் இந்த படம் வெளிவரும் என அமீர்கான் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தை விஜய் சேதுபதி பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்.
- விஜய் சேதுபதி செல்லத்துக்கு இப்படி ஒரு நிலைமையா
- ஹீரோ இமேஜுக்காக 5 கோடி சம்பளத்தை கம்மியாக்கிய விஜய் சேதுபதி
- மகாராஜா படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ