புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அடுத்தடுத்த சர்ப்ரைஸால் திக்கு முக்காட வைக்கும் ஜெயிலர்.. ரஜினியுடன் இணைய போகும் டாப் ஹீரோ

சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14 திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதை தொடர்ந்து சமீபத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்தார். அதை போஸ்டர் மூலம் தெரிவித்திருந்த படக்குழு தற்போது டாப் ஹீரோ ஒருவரையும் இப்படத்தில் இணைத்துள்ளது.

Also read: கடனில் தத்தளித்த நடிகரை முதலாளியாக ஆக்கிய ரஜினி.. தலைவரை சாமியாக கும்பிட்ட சம்பவம்

அந்த வகையில் நடிகர் மோகன்லால் இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை அனைத்தும் முடிந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் சம்பந்தப்பட்ட பகுதிகள் படமாக்கப்பட இருக்கிறது. இந்த விஷயம் தான் தற்போது ரஜினி ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது.

மேலும் ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்த படத்தில் அவர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அதிரடியான ஒரு வீடியோவையும் வெளியிட்ட ஜெயிலர் டீம் படம் பற்றிய மிகப்பெரிய சஸ்பென்சையும் உருவாக்கி இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள செய்தியும் படத்தின் மீதான ஆவலை தூண்டி இருக்கிறது.

Also read: ரஜினி உதாசீனப்படுத்திய இயக்குனர்.. ஆறுதல் கூறி அரவணைத்த சிவகார்த்திகேயன்

அந்த வகையில் ஜெயிலர் படத்தில் 3 திரையுலகில் இருக்கும் உச்ச நடிகர்கள் நடித்துள்ளதால் இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவெடுத்துள்ளது. கடந்த பல மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இரண்டு சண்டை காட்சிகள் உட்பட சில காட்சிகள் தான் மீதம் இருக்கிறதாம்.

தற்போது சிறு ஓய்வு இடைவேளையில் இருக்கும் ஜெயிலர் டீம் வரும் பொங்கலுக்கு பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதன் பிறகு தான் பட குழு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம். அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரத்தில் இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வில் ட்ரெய்லரையும் வெளியிட தற்போது பட குழு மும்முரமாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜய்யை போடலனா கண்டமேனி திட்டுவாரு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பிரபலம்

Trending News